கல்முனை கிரீன் பீல்ட் வீட்டுத்திட்ட சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம்





நூருல் ஹுதா உமர்-
ல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள கிரீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் உள்ள வடிகான் உள்ளிட்ட சுற்றுச்சூழலினை துப்புரவு செய்யும் பாரிய சிரமதான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் கல்முனை மாநகர சபை, நீர்ப்பாசனத் திணைக்களம், கல்முனை பொலிஸ், பொது அமைப்புக்களின் பங்களிப்புடன் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனையொட்டி பொதுமக்களை விழிப்பூட்டும் வகையில் பல கூட்டங்களும் கலந்துரையாடல்களும் பல்வேறு மட்டங்களிலும் இடம்பெற்றது. அந்தவகையில் கடந்த (11) கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் திருமதி இஸட்.சரப்டீன் தலைமையில் விசேட கூட்டமொன்று இடம்பெற்றது. இதன்போது சுகாதார அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக விளக்கமளித்தனர். அத்துடன் பொதுமக்களை விழிப்பூட்டும் வகையிலான பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதேவேளை கிரீன் பீல்ட் வீட்டுத்திட்ட சுகாதார கழிவு முகாமைத்துவம் தொடர்பாகவும் விழிப்புணர்வினை ஏற்படுத்தி அதனை முறையாக மேற்கொள்வதற்கான வேலைத்திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது. இந்த சிரமதான நிகழ்வில் பொதுமக்களும் கலந்துகொண்டு பூரண ஒத்துழைப்புகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :