தேசிய ரீதியில் கட்சிகள் களமிறக்கியுள்ள பட்டியல்களில், சலீம் போன்ற கல்வியலாளர்களை; அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தான் நிறுத்தியுள்ளது.- தலைவர் றிசாட் பதியுதீன்



நாட்டில் தற்போது System change பற்றி பரவலாக பேசப்படுகின்றது. மக்கள் எதிர்பார்க்கும் அந்த மாற்றம் ஏற்பட வேண்டுமானால் பாராளுமன்ற உறுப்பினர்களிலும் சிறந்த அனுபவமுள்ள இறைவனுக்கு பயந்து பயணிக்கக்கூடிய நல்லவர்களை மக்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்ப முன்வரவேண்டும்; என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வும் தேர்தல் காரியாலயங்களை திறந்து வைக்கும் நிகழவும், மாவட்டம் முழுவதும் 2024.10.24 ஆம் திகதி இடம்பெற்றது. இந்த வரிசையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர் சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம். சலீம் (DS) அவர்களின் அறிமுகமும் அலுவலக திறப்புவிழாவும் சாய்ந்தமருதில் இடம்பெற்றபோதே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் அல்ஹாஜ் றிசாட் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடுமுழுவதும் சிறந்த வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அந்த வகையில் சாய்ந்தமருதில் சிறந்த நிருவாகியான சலீம் அவர்களை நிறுத்தியுள்ளோம் அவர் இந்த பிராந்தியத்துக்கும் விஷேடமாக இந்த சாய்ந்தமருதுக்கும் ஆற்றிய பணிகளை இங்குள்ள மக்கள் நன்கு அறிவர். அவர் சாய்ந்தமருது மக்களின் பல்வேறு தேவைகளுக்காக தன்னை அர்ப்பணித்து செயட்ப்பட்டவர். அவரைப்போன்று நாங்கள் நிறுத்தியுள்ள அத்தனை வேட்பாளர்களும் ஏதே ஒரு துறையில் சிறந்தவர்களையே நிறுத்தியுள்ளோம். இந்த தேர்தலானது மிக முக்கியமான ஒன்றாகும். உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட்டு, மக்கள் பிழையான முடிவை எடுத்துவிடக்கூடாது. சில சந்தர்ப்பங்களில் மக்கள் எடுத்த பிழையான தீர்மானங்களினால் நாடும் நாமும் கஷ்ட்டத்தில் இருப்பதையும் மறந்துவிடக்கூடாது என்றும். தெரிவித்தார்.

நிகழ்வின்போது இம்முறை களத்தில் குதித்துள்ள றிஸ்லி முஸ்தபா, அன்சில் அல் அம்ரி உள்ளிட்டவர்களும் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொடிருன்தனர்.










 











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :