கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களினால் கிழக்கு மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இன்று (18) தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஆளுநரால் வழங்கப்பட்டன.
புதிய ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஆளுநர் அவர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கு சகல அதிகாரங்களும் வழங்கப்பட்டு அரசியல் தலையீடுகள் இன்றி தமது சேவைகளை ஆற்றக்கூடிய சூழலை உருவாக்குவதாக தெரிவித்தார்.
புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
தலைவர் - திரு. பி.எச்.என். ஜெயவிக்ரம (முன்னாள் திருகோணமலை மாவட்ட செயலாளர் - ஓய்வு)
உறுப்பினர்- திரு. கே. அருந்தவராஜா (முன்னாள் திருகோணமலை மேலதிக மாவட்டச் செயலாளர் - ஓய்வு)
உறுப்பினர் - திரு. ஜி.எல்.ஆரியதாச மாயா (முன்னாள் அம்பாறை பிரதேச செயலாளர் - ஓய்வு)
உறுப்பினர் - திரு. எஸ். ஹமீத் ரிபாஹிதீன் (ஓய்வு பெற்ற பாடசாலை ஆசிரியர்)
உறுப்பினர் - திரு. எஸ். முகமது இக்ரிமா (உதவி வெடிபொருட்கள் கட்டுப்பாட்டாளர், பாதுகாப்பு அமைச்சு)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment