ஊருக்கு எம்.பி என்றதெல்லாம் போதும். நல்லதொரு அரசியல் தலைவரை உருவாக்குங்கள் – எஸ்.எம்.சபீஸ்



மாளிகைக்காடு செய்தியாளர்-
முஸ்லிம்களுக்கு அடையாளம் பெற்றுத்தந்த மர்ஹூம் பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள் ஒரு தலைவனாக எல்லா மக்களையும் தன் குழந்தைகளாக நினைத்து கடமை புரிந்தார். அவரின் மறைவிற்கு பின் வந்த முஸ்லிம் தலைவர்கள் சுயநலத்தை விதைத்து மக்களை திசை திருப்பி விட்டனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமான எஸ்.எம் சபீஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட பல்வேறுபட்ட கிராமங்களில் மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடும் போதே இதனைத் தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

நல்லதொரு தந்தை ஒரு பிள்ளை நுளம்பு கடியிலும், இன்னொரு பிள்ளை வெறும் தரையிலும் மற்றப் பிள்ளை குளிரூட்டப்பட்ட அறையிலும் படுத்து தூங்க இடமளிக்கமாட்டார். அப்படிப்பட்ட ஒரு தலைவன் எமக்குத் தேவை. முஸ்லிங்களை சமமாக வழிநடத்தும் பக்குவம் உள்ள தலைவர்களை உருவாக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

ஒருத்தன் நடுவீதியில் போதையில் நிதானம் இழந்து கிடந்ததைக் கண்டும் அவனுக்கு நாம் வாக்களிப்போம் என்றால் அதுதான் முட்டாள் தனம். கடந்த காலங்களில் இருந்தது போன்று ஊர்வாதம் இம்முறையும் இருந்தால் நாம் சமூக அளவில் தோற்போம். நிச்சயமாக இனவாத, பிரதேச வாத சிந்தனை கொண்டோர்களினால் நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கி விட முடியாது. நான் ஊரின் தலைமை பள்ளிவாசல் நிர்வாக தலைவராக இருந்த காலத்தில் போதைவஸ்துக்கு அடிமையானவர்களின் திருமணங்களை கூட இடைநிறுத்தி இருந்தமையை மக்கள் அறிவார்கள். நாம் நமது எதிர்கால சந்ததிகளை சிறப்பாக வாழ்விக்க கடமைப்பட்டுள்ளோம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :