தம்புள்ள பள்ளிவாயல் இன்று அதே இடத்தில் இயங்குவதற்கு காரணமானவர் .
கடும் போக்கு வாதிகள் பள்ளிவாயலை அகற்றியே தீருவோம் என உறுதியாக இருந்த போது அரசிடம் பேசி வேலையில்லை,,என அறிந்து சர்வதேசத்தை நாடி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து அனைவரது எதிர்ப்பையும் சம்பாதித்தவர் .
முஸ்லிம்களது பள்ளிவாயல்களை பலவந்தமாக எடுக்க முடியாது சட்ட ரீதியாக எடுப்போம் என நினைத்து . நாடு நகர அபிவிருத்தி சட்ட மூலத்தை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்த போது முன்னால் அமைச்சர் அத்தாவுல்லா இந்நாள் அமைச்சர் ரிசாத் போன்றோர் அதனை ஆதரித்த போதும் நீதிமன்றம் வரை சென்று அதனைத் தடுத்து நிறுத்தியவர்.
புலி பயங்கரவாத்தை அழித்த அரசு காவி பயங்கர வாதத்தை தோற்றுவித்திருக்கிறது. என பாராளுமன்றத்திலே மகிந்தவின் பங்காளிக் கட்சியாகவும் நீதியமைச்சராகவும் இருந்து கொண்டு அரசை எதிர்த்துப் பேசியவர்.
பேருவல தர்காடவுன் முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினை ஏற்பட்ட பொழுது முதன் முதலாக அந்த இடத்துக்குச் சென்று களநிலவரத்தைப் புரிந்து கொண்டு அணத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து
அவர்களது ஒப்பத்தை பெற்று ஜனாதிபதிக்கு காவி பயங்கரவாதிகளை அடக்குமாறு கடிதம் சமர்ப்பித்தவர் .
ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காதபோது அனைத்து முஸ்லிம் நாட்டினது வெளிநாட்டுத் தூதுவர்களையும் அழைத்து அவர்கள் மூலமாக ஜனாதிபதிக்கு அழுத்தத்தைக் கொடுத்து காவிகளின் அட்டகாசத்தை அடக்கியவர்.
அத்தோடு நின்றுவிடாமல் பேருவல தர்காடவுன் சம்பவத்தை சர்வதேச மயமாக்கி ஐ நா மனித உரிமை ஆணையகத்தில் 250 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கையளித்து மஹிந்த அரசுக்கு சர்வதேச அரங்கில் மிகப் பெரிய அழுத்தத்தை கொடுத்து , நாட்டைக் காட்டிக்கொடுத்தவர் என்ற அவப்பெயரையும் முஸ்லிம் சமூகத்துக்காக பெற்றுக் கொண்டவர் .
சென்ற ஜனாதிபதித் தேர்தலின் போது கூட உங்களை அஷ்ரப் இருந்த நிலைக்கி உயர்த்தி 300 பில்லியன் பணமும் தருகிறோம் எதுவேண்டுமென்றாலும் தருவோம் எங்களோடு இருங்கள் என்று மகிந்த அரசு கூறியும் அதற்க்குக் கூட ஆசைப்படாது சரியான நேரத்தில் மகிந்தவுக்கு சரியான பதிலடி கொடுத்தவர்.
முஸ்லிம்களுக்கென்று ஒரு மாகாணம் வேண்டும் என்பதற்காக பலருடைய பழிச் சொற்களையும் விஷ வார்த்தைகளையும் எம்மவர்களின் எறி அம்புகளையும் தாங்கிக்கொண்டு ஒரு சிறந்த முதலமைச்சரையும் மாகாணத்தையும் முஸ்லிம்களாகிய எங்களுக்கு பெற்றுத் தந்தவர்.
இன்று 20 வது தேர்தல் சீர்திருத்தம் என்ற பெயரில் சிறுபான்மை சமூகங்களை குறிப்பாக முஸ்லிம் சமுகத்தை அரசியல் அனாதையாக மாற்றக்கூடிய இந்த தேர்தல் திருத்தத்தை கொண்டுவராமல் அரசை இக்கட்டானநிலைக்கு தள்ளி பாராளுமன்றை கலைத்த பெருமை எம் தலைவரையே சாரும்
இது வேற யாரும் இல்லை தலைவன் ரஊப் ஹகீம் தான்
0 comments :
Post a Comment