ஒன்று கூடுவோம் இலங்கை மற்றும் இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு இடையே ஒப்பந்தம்



ன்று கூடுவோம் இலங்கை அமைப்புக்கும் தென் கிழக்கு பல்கலைக்கழகத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று 2024.10.11 ஆம் திகதி உபவேந்தரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

குறித்த ஒப்பந்தம் நல்லிணக்கம் ,சமாதானம் மற்றும் இளையோர் தலைமைத்துவம் என்பவற்றை ஊக்குவித்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயிற்சிப்பட்டறைகளை வழங்குவதன் ஊடாக சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் அமைந்திருந்தது.

பதில் உப வேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் மற்றும் அமைப்பின் தேசிய பணிப்பாளர் விஷ்ணி வின்சென்ட் ஆகியோருக்கிடையே குறித்த ஒப்பந்தம் கைச்சாத்தானது.

இதன் ஊடக ஒன்றுகூடுவோம் இலங்கை அமைப்பானது பல்கலைக்கழக மாணவர்களுக்கு தங்களுடைய அமைப்பினுடைய பாடத்திட்டமான அகிம்சை, நல்லிணக்கம் மற்றும் மோதல் உருமாற்றம், இளையோர் தலைமைத்துவம் மற்றும் பண்புகள், பால்நிலை தலைமைத்துவம், சூழல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புதல், சமூக வலைத்தளங்கள் மற்றும் கருத்து சுதந்திரம், மற்றும் வெறுப்பு பேச்சுக்களை எதிர்கொள்ளல் ஆகிய தலைப்புகளில் பயிற்சி மற்றும் செயலமர்வுகள் நடாத்துவதுடன் தங்களுடைய அம்பாறை மற்றும் மட்டக்களப்பு நல்லிணக்க நிலையங்களில் தேவையான பயிற்சிகளை வழங்கவும் ஒப்பந்தம் செய்துகொண்டனர். பல்கலைக் கழகத்தின் சார்பில் அதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதோடு , ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பின் தகவல் மற்றும் தொடர்பாடல் பாடத்திட்டத்தை உருவாக்கி கொடுப்பதற்கான தீர்மானமும் கைச்சாத்திடப்பட்டது.

இந் நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் சார்பில் பதில் உப வேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத், பதில் பதிவாளர் எம்.ஐ.நௌபர், தொழிநுட்ப பீடத்தின் துறைத் தலைவர்கள் கலாநிதி எம்.எம்.எம். முனீப், மற்றும் ஆர்.கே.ஏ. றிபாய் காரியப்பர், விரிவுரையாளர் ஏ.எப்.. ஷர்பானா ஆகியோர் கலந்துகொண்டதுடன், ஒன்றுகூடுவோம் இலங்கை அமைப்பின் சார்பாக , அமைப்பின் தேசிய பணிப்பாளர் விஷ்ணி வின்சென்ட், பிரதி தேசிய பணிப்பாளர் சினான் உதுமாலெவ்வை மற்றும் நிதி பிரிவின் தலைவர் மாலன் செமிரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :