சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவைக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் நிதியிலிருந்து வழங்கி வைக்கப்பட்ட டீ சேர்ட் அறிமுக நிகழ்வு ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் தலைவர் அஸ்வர் அப்துல் சலாம் தலைமையில் (06) இடம்பெற்றது.
இந் நிகழ்வில் ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஆலோசகரும், சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவருமான மௌலவி எம்.சலீம் (ஷர்கி), உப தலைவர்களான எம்.ரிபாஸ், எஸ்.எச்.எம் ஜிப்ரி, செயலாளர் யூ.கே காலிதீன், பொருளாளர் எஸ்.எம் நசீர், ஆலோசகர் எம்.நாசர் உட்பட ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் ஜனாஸா நலன்புரி பேரவையின் பிரச்சினைகள்,குறை நிறைகளை ஆராய்ந்ததுடன், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.
இதன்போது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் நிர்வாகிகள் பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
0 comments :
Post a Comment