எனது வீட்டுக்குள் பிரச்சினையை உருவாக்கி சீரழித்தார் றிசாட்-முன்னால் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்



ஹஸ்பர் ஏ.எச்-
க்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராகவும் மூதூர் தொகுதியின் வேட்பாளராகவும் செயற் பட கட்சி அங்கீகாரம் வழங்கி உள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

கிண்ணியாவில் இன்று (06) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கும் போது, எனது அரசியல் வாழ்வு 1988 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மர்ஹூம் அஷ்ரபுடன் ஆரம்பமானது.
1988 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபை தேர்தலில் 35,558 வாக்குகளைப் பெற்று நான் ஐந்து ஆசனங்களையும், 42000 வாக்குகளைப் பெற்று ஈபிஆர்எல்எப் ஐந்து ஆசனங்களையும்பெற்றது.

பத்து வருடங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அதன் தேசிய அமைப்பாளராக மாவட்ட பொறுப்பாளராக மிகவும் நான் நேசித்த ஒரு தலைவராக ரிஷாட் பதுருதீனை எம். எச் . எம் .அஷ்ரப் அவர்களுக்கு பிறகு ஒரு தூய்மையான தலைவராகவே நினைத்து அவரோடு பயணித்தேன்.

மாறாக அவரது செயற்பாடுகள் ஐந்து வருட காலமாக எனக்கு மாறானதாக எனது வீட்டுக்குள்ளே ஒரு பிரச்சனை உருவாக்கி எனது குடும்பத்துக்குள் பிளவுகளை உண்டாக்கி எனது பெயரை சீரழித்து என்னை கட்சியிலிருந்து ஒதுக்குவதற்கு நினைத்தபோது அவரது உள்ளத்தை உருவத்தை கண்டபோது நான் அவரது கட்சியை விட்டும் எனது பதவியை விட்டும் அமைப்பாளர் பதவியை விட்டும் வெளியேறினேன்.

சஜித் பிரேமதாசாவுடன் சேர்ந்து அவருக்காக செயற்படும் படிகூறிய போது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இளைஞர்களின் சமூக ஆதரவை பெற்று ரணில் விக்ரம சிங்கவின் உடைய ஐக்கிய தேசியக் கட்சியிலே நான் போட்டியிடுகின்றேன்

*நான் இருந்தால் ரிஷாட் பதுருதீனுக்கு பிரச்சினையாகிவிடும் என கருதியோ என்னை கட்சியை விட்டு வெளியேற்றுவதே மறைமுகமாக ஐந்து வருடங்கள் செயல்பட்டதை நான் ஒரே ஒரு நாளில் ஒரே ஒரு நிமிடத்தில் ஒரே தினத்தில் கண்டு கொண்டேன்*
என்னுடைய மூத்த மகளின் கணவரை வேட்பாளராக தன்னிச்சையாக அவர் அறிவித்தார் என தெரிவித்தார்


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :