சிலிண்டர் சின்னத்தில் அதாஉல்லா, முஷாரப், ஜெமீல் போட்டி



அஸ்லம் எஸ்.மெளலானா-
திகாமடுல்ல மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் 06 முஸ்லிம்களும் 03 சிங்களவர்களும் ஒரு தமிழரும் போட்டியிடுகின்றனர்.

முன்னாள் அமைச்சரான தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவும் இந்த வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

அத்துடன் முன்னாள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரான கலாநிதி ஏ.எம். ஜெமீல் ஆகியோரும் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

இவர்களுடன் ஐக்கிய தேசிய கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் லொயிட்ஸ் ஆதம் பெலப்பை, கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சப்ராஸ் மன்சூர் மற்றும் நுஸ்கி அஹமட் ஆகியோரும் ஒரேயொரு தமிழ் வேட்டாளராக வி.ஜெயச்சந்திரன் என்பவரும் போட்டியிடுகின்றனர்.

அத்துடன் பெரும்பான்மை சமூகத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் தயா கமகே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜேவிக்ரம மற்றும் பிரான்ஸிஸ் டயஸ் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :