மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் விவசாய போதனாசிரியர் பிரிவில் சோளன் அறுவடை விழா



ஏறாவூர் நிருபர் சாதிக் அகமட்-
ட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் விவசாய போதனாசிரியர் பிரிவில் சோளன் அறுவடை விழா

இன்று மீராகேணி பிரதேசத்தில் விவசாய போதனாசிரியர் மு.ஹ. முர்ஷிதா ஷிரீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மௌஜுத் , விவசாய உதவி பணிப்பாளர் இ.லெ. பௌசுல் அமீன், விவசாய உதவி பணிப்பாளர் எ. சுகுந்ததாசன், சுகாதார வைத்திய அதிகாரி திருமதி. சாபிறா வஸீம் , பாடவிதான உத்தியோகத்தர் ந.லட்சுமனன், விவசாய போதனாசிரியர் கா.லிங்கேஸ்வரன்,கிராம சேவகர் M.சஸ்னா, விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் த.ஜெயரஞ்சனி ஆகியோர் கலர்ந்து சிறப்பித்தனர்.

ஏறாவூர் பிரதேசம் நிலப் பற்றாக்குறையான பிரதேசமாக இருந்த போதிலும் இவ்வாறான விவசாய செய்கை களில் விவசாய திணைக்களத்தின் அளப்பரிய சேவைகளால் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.இதற்காக எமது விவசாய போதனாசிரியர் மு.ஹ.முர்ஷிதா ஷிரீன் அவர்களுக்கு பிரதேச செயலாளர் என்ற ரீதியில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறினார்.

மேலும் விவசாயி தனது உரையில் விவசாய திணைக்களத்தின் ஊக்குவிப்பினால் போகமற்ற காலத்தில் இச்சோளச் செய்கையை மேற்கொண்டதனால் ஒரு பொத்தி 40 முதல் 50 ரூபாய்க்கு தன்னால் விற்பனை செய்யக் கூடியதாக உள்ளதாகவும் படைப்புழு தாக்கத்தில் இருந்து தான் பாதுகாப்பு பெற்றதாகவும் இச்செய்கையில் இருந்து அதிகளவான வருமானத்தை ஈட்டக் கூடியதாக உள்ளதாகவும் ஊடுபயிராக வத்தளை மற்றும் உழுந்து போன்ற உபவுணவுப் பயிர்ச் செய்கை மூலம் குறித்த நிலப் பரப்பினை பேண்தகு ரீதியில் பாவித்து மேலதிக வருமானத்தை ஈட்டிய தாகவும் கூறினார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :