சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் (GMMS) சர்வதேச முதியோர் தினம் அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் தலைமையில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.
நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவியும் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற பெண்நீதிபதியுமான மைமுனா அஹமத், அவரது கணவர் அஹமத் மற்றும் ஜம்இய்யத்தில் உலமா சாய்ந்தமருது - மாளிகைக்காடு கிளையின் தலைவர் எம். எம். எம். சலீம் (ஷர்க்கி) ஆகியோரின் தன்னலமற்ற சேவையினைப் பாராட்டி, பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ் மற்றும் ஆசிரியர் குழாத்தினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளரும் பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளருமான எம்.ஐ.எம். றியாஸ் மற்றும் பாடசாலையின் ஆசிரிய ஆசிரியைகள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு கௌரவிக்கப்பட்ட ஆளுமைகளுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment