உதாரணமாக சம்மாந்துறையில் இன்றைய தேசிய மக்கள் கட்சியின் பிரதான களப்போராளிகள் கடந்த தேர்தலில் முட்டு கட்சியை ஆதரித்தவர்களே)
தேசிய மக்கள் சக்தியின் புதிய ஆதரவாளர்களில் கணிசமானவர்கள் கடந்த ஆட்சி காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடைய இனவாத நிகழ்ச்சி நிரலை ஆதரித்தவர்கள்.
மஹிந்த ராஜபக்ஷ அவர்களை கொண்டாடியவர்கள் மைத்திரிபால அவர்களுக்கும் மைத்திரிபாலவின் நல்லாட்சியை கொண்டாடியவர்கள் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை மீட்பராக கொண்டாடியவர்கள் அனுர குமார திசாநாயக்கா அவர்களுக்கும் வாக்களித்துள்ளார்கள்.
கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தீவிர இனவாத நிகழ்ச்சி நிரல் நாட்டின் தேசிய சிறுபான்மையினர்களை அவர்களது உரிமைகளை ஒடுக்கிய பொழுது எவருமே வீதிக்கு வந்து பேசவில்லை.
கோர யுத்தமும் இன ஒடுக்குமுறை அரசியலும் ஊழலும் இனவாதமும் மிக்க அரசியலும் பொருளாதாரத்தை சீரழித்து நாட்டை வங்குரோத்து நிலைக்குள்ளாக்கிய பொழுதுதான் வீதிக்கு வந்து தேசிய நல்லிணக்கம் சகவாழ்வு சமாதானம் பற்றி ஒன்று கூடிப் பேசினார்கள்.
இந்த சந்தர்ப்பவாத சமூக நல்லிணக்கம் இலங்கையின் அரசியலை தூய்மைப்படுத்துவதற்கு மிகப்பெரிய சவால்.
தேசிய மக்கள் சக்தியின் ஊழலும் இனவாதமமற்ற ஒன்றுபட்ட தேசத்தை நோக்கிய ஆட்சி குறித்த கதையாடல்களுக்கு இலங்கையின் இனத்து அரசியலுக்கு பழக்கப்பட்டு போன மக்கள் எப்படி ரியாக்ட்React பண்ண போகிறார்கள் என்பதே இப்போதுள்ள மிகப் பெரிய கேள்வி.
வைத்தியர் சாபி விவகாரம், மலட்டு கொத்து, மலட்டு ஆடைகள், இலங்கையில் இஸ்லாமிய மயமாக்கம் ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாத் பதியுதீன் அவர்களது கைது, சர்வதேச இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள்QatarCharity முஸ்லிம் வர்த்தகர்களுக்கு சொந்தமான வர்த்தக நிறுவனங்கள் மீதான கெடுபிடிகள், ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கு பின்னரான முஸ்லிம் சமூகத்தின் மீதான கெடுபிடிகள் தனிமைப்படுத்தல்,பலவந்த ஜனாஸா எரிப்பு வடகிழக்கு மாகாணங்களுக்கான தனியான செயலணி, முஸ்லிம்களின் பூர்வீக பூமிகள் மீதான ஆக்கிரமிப்பு இப்படி மிக மோசமான இன ரீதியிலான பாரபட்சங்கள் இந்த நாட்டில் காட்டப்படுகிற பொழுது இப்பொழுது தேசம் பற்றி பேசுகின்ற எவருமே காட்டமான எதிர்ப்புகளைக் காட்டவில்லை...
மேம்போக்காகவும் பூசி மெழுகியும் தங்களுடைய இனவாத முகத்தை மறைத்து தேசப் பிரமிகளாகத் தங்களைக் காட்டிக் கொண்டார்கள்.
எனவே இந்த இனக் குழும அரசியல் சூழலில் முஸ்லிம் சமூகம் தனது தனித்துவத்தை இழந்து தேசிய கட்சிகளுடன் சங்கமிப்பது மிகவும் ஆபத்தானது....
எல்லா மக்களும் ஒரே கட்சிக்கு தான் வாக்களிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது ஜனநாயகமும் அல்ல...
இலங்கை போன்ற இனக்குழும அரசியல் உள்ள நாடுகளில் சிறுபான்மை இனங்கள் தங்களது தனித்துவத்தை பேணிக் கொண்டு தேசிய நல்லிணக்கத்திற்கு ஆதரவளிப்பதுதான் புத்திசாலித்தனமானது.
கடந்த காலத்தில் தனித்துவ அரசியலில் பலவீனங்கள் காணப்பட்டாலும் அவ்வாறான பலவீனங்களைக் களைந்து பயணிப்பதுதான் நமக்கு மிகச்சிறந்த அரசியல் தெரிவாகும்.
இலங்கைத் தமிழ் தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவை மிகவும் புத்தி பூர்வமாக அவர்களை பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகளுடாக வழங்குவதற்கு தீர்மானித்திருக்கிறார்கள்.
முஸ்லிம் சமூகத்துக்குள்ளே புதிதாக எழுச்சியடைந்திருக்கும் தேசிய மக்கள் சக்தி மீதான அலை இரண்டு பிரதான காரணிகளில் தங்கி இருக்கிறது.
@ முஸ்லிம் கட்சிகளின் பாரம்பரிய அரசியல் குறித்து அவர்களுக்குள் இருக்கும் அதிருப்தி.
@ இலங்கையின் இனத்துவ அரசியல் குறித்த அவர்களது புரிதலின்மை.
இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்கும் இதுவரை முஸ்லிம் சமூகத்தில் அரசியல் செய்து வந்த கட்சிகளே பிரதான காரணமாகும்.
எனவே தேசிய மக்கள் சக்தியின் நாட்டுக்குப் பயனுள்ள உயர்ந்த திட்டங்களுக்கு நமது தனித்து அரசியல் பலத்தை பயன்படுத்தி ஆதரவளிப்பதே உசிதமாகும்.
இதற்கு பாரம்பரிய முஸ்லிம் அரசியல் கட்சிகள் எப்படி எதிர்வினை ஆற்றப் போகிறது என்பதை பொறுத்து அந்தக் கட்சிகளின் எதிர்காலம் அமையப்போகிறது.
0 comments :
Post a Comment