சர்வதேச முதியோர் தினத்தில் இருநூறு சிரேஸ்ட பிரஜைகள் கௌரவிப்பு



வி.ரி.சகாதேவராஜா-
ர்வதேச முதியோர் மற்றும் சிறுவர் தினத்தில் திருக்கோவில் பிரதேச காயத்ரி கிராமம் மற்றும் மண்டானை கிராமங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 200 சிரேஸ்ட பிரஜைகளுக்கு பரிசு வழங்கி கௌரவம் அளிக்கப்பட்டது.

திருக்கோவில் சமூக தரிசன நிறுவனம்(SVO) இந்த ஏற்பாட்டை செய்தது.

சமூக தரிசன நிறுவன ஸ்தாபக தலைவர் பி.நந்தபாலு தலைமையில் காயத்ரி கிராமம் சமூக தரிசன நிறுவனம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது..

ஆன்மீக அதிதிகளாக சிவஸ்ரீ கிருபாகரக் குருக்கள் , திருநாவுக்கரசு நாயனார் குருகுலப்பணிப்பாளர் கண. இராஜரெத்தினம்( கண்ணன் ) ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

கௌரவ அதிதிகளாக முன்னாள் காரைதீவு தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் பொத்துவில் உப தவிசாளர் பெருமாள் பார்த்திபன் பார்த்திபன் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

கலந்து கொண்ட 200 சிரேஸ்ட பிரஜைகளுக்கு மாலை சூட்டி பரிசு பொருள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :