திருகோணமலையில் மாற்றுத்திறனாளிக்கு வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு.!



ஹஸ்பர் ஏ.எச்-
சுவிட்சர்லாந்து பேர்ன் மாவட்டம் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி சமூகநலம் பண்பாடு அறப்பணி மையத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (05.10.2024) திருகோணமலையில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு, திருகோணமலை மாவட்ட பொறுப்பாளர் ஆசிரியர் சக்தி சரவணபவ ஆனந்தம் திருச்செந்தூரன் தலைமையில் அன்புவழிபுரம் பிரதேசத்தில் இடம்பெற்றது.

கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்ற மாற்றுத்திறனாளி ஒருவரின் நீண்டகால குறைபாட்டை தீர்த்து வைக்கும் முகமாக வாழ்வாதார உதவியாக கோழிக்கூடு வழங்கி வைக்கப்பட்டது.

இதற்கான, ஏற்பாட்டை அறப்பணி மையத்தின் நிறுவனர் சக்தி சுவிஸ் சுரேஷ் சகோதரர் அவர்கள் முன்னெடுத்திருந்ததுடன், சுவிட்சர்லாந்தை சேர்ந்த தனேஸ்வரன் அபிஷேக் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர்களின் குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் இவ்வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டது.
அறப்பணி மையத்தின் நிறுவனர் சக்தி சுவிஸ் சுரேஷ் சகோதரரின் நேரடி கண்காணிப்பில் இடம்பெற்ற நிகழ்வில் அறப்பணி மையத்தின் போசகர்கள் சிரேஷ்ட ஊடகவியலாளர் அ.அச்சுதன், இரா.இராகுலன், அறப்பணியாளர்கள், மாணவர்கள், பிரதேச மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :