கிராமிய, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தனது அமைச்சின் கீழ் உள்ள நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு ( Urbun Settlement Development Authority) புதிய தலைவரை நியமித்துள்ளார்.
அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சந்தன பண்டாரவிடமிருந்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட புதிய தலைவர் அசங்க அபேவர்தன, தனது அலுவலகத்தில் தனது புதிய பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருகோணமலை மாவட்ட ஆளுநராகவும், அம்பாறை மாவட்ட மேலதிக ஆளுநராகவும் கடமையாற்றிய அசங்க அபேவர்தன, அரச நிர்வாக சேவையில் வினைத்திறன்மிக்க அதிகாரியாக 30 வருடங்களுக்கு மேலாக பொது சேவைகளுக்காக தன்னை அர்ப்பணித்துள்ளார்.
நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விஜயானந்த ஹேரத் மற்றும் அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ப்ரெட்ரிக் ரொட்ரிகே
கிராமிய, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சரின் ஊடகச் செயலாளர்
0 comments :
Post a Comment