"சிறுவர்களின் மனநிலையை வளப்படுத்துவதில் அதீத அக்கறைகொள்ள வேண்டும்" - தலைவர் ரிஷாட்!



ஊடகப்பிரிவு -
ருணை, அன்பு, அரவணைப்பு என்பவற்றால் சிறுவர்களின் மனநிலையை பலப்படுத்த, அவர்களுக்கான எதிர்காலத்தில் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
"சிறுவர் தினத்தை முன்னிட்டு அவர்களை வாழ்த்துவதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
பாரிய சவால்களை எதிர்கொண்டே தங்களை கட்டமைக்க வேண்டிய நிர்ப்பந்தம், இன்றைய நவீன உலகில் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தச் சவால்களை சாதகமாக ஆக்குவதற்கான வழிவகைகளை கண்டறிய வேண்டியது சமூகத்தலைவர்களின் பொறுப்பாக உள்ளது.
இந்தப் பொறுப்பில் நாம் கவனஞ்செலுத்தி களப்பணிகளில் ஈடுபடுகின்றோம். எல்லா சிறுவர்களினதும் எதிர்கால நம்பிக்கைகளுக்கு, எமது செயற்பாடுகள் பக்கபலமாக அமையும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :