திகாமடுல்லவில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை பெரும்பான்மையினருக்கு தாரைவார்க்க திரைமறைவில் சதி.- புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சப்ராஸ் மன்சூர்



முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட திகாமடுல்ல மாவட்டத்தில் அவர்களுக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கபளீகரம் செய்ய திரைமறைவில் திட்டங்கள் தீட்டப்பட்டுவதாகவும் குறித்த திட்டத்துக்கு NPP என்கின்ற தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்கின்ற முஸ்லிம் சகோதரர்களும் துணைபோவதாகவும் அவர்கள் உண்மையை உணர்ந்து சிறுபான்மை முஸ்லிம் மற்றும் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அவர்கள் பெற வளிவிடுமாறும் புதிய ஜனநாயக முன்னனியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் சப்ராஸ் மன்சூர் வேண்டுகோள் விடுத்தார்.

நிறைவேறாத உணர்வுபூர்வ பேச்சுக்களுக்கும் முகநூல் எழுத்தாளர்களின் பசப்பு வார்த்தைகளுக்கும் சிலர் மண்டியிட்டிருப்பது; எதிர்காலத்தில் மிகுந்த பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

இலங்கையில் 1915 ஆம் ஆண்டுமுதல் முஸ்லிம்கள் பல்வேறு நெருக்குதல்களுக்கு உள்ளானதாகவும் அப்போதெல்லாம் முஸ்லிம்களுக்காக தமிழ் தலைவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரே அவற்றுக்காக குரல் கொடுத்ததாகவும் பிற்காலத்தில் மர்ஹும் அஷ்ரப் அவர்களின் வருகைக்குப் பின்னர் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய திராணியுள்ள ஒரு தலைவனை கல்முனை இந்த நாட்டுக்கு அர்ப்பணித்ததாகவும் அந்த அஷ்ரப் என்கின்ற மாமனிதனின் முயச்சியினாலேயே தற்போதைய ஜனாதிபதியின் கட்சி உள்ளிட்ட சிறு கட்சிகள் அரசியலுக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

அன்றிருந்த உறுப்பினர் தெரிவில் 12.5% என்ற வெட்டுப்புள்ளியை 5% வீதமாக மாற்றுவதற்கு அஷ்ரப் எடுத்த முயச்சியினால் பிரதிநிதித்துவம்களைப் பெற்ற ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் திகாமடுல்லவில் அவர் சார்ந்த சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை இலக்குவைத்து வேட்பாளர்களை நிறுத்தி அதிலும் முதன்மை வேட்பாளரான வசந்தவுக்கு ஒரு தெரிவு வாக்கைப் பெற முயச்சிப்பது சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை பறித்தெடுக்கும் செயல் என்றும் தெரிவித்தார்.

மர்ஹும் அஷ்ரப், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்காக குரல் கொடுக்க கட்சியை உருவாக்கி செயற்பட்ட போது; பின்னர் வந்த றவூப் ஹக்கீம், றிஷாத் பதியூதீன் மற்றும் சுமந்திரன் உள்ளிட்டோர் வெளிநாடுகளின் கைக்கூலிகளாக செயற்பட்டு சிறுபான்மையினரின் அபிலாசைகளை புறம்தள்ளி அவர்களது ஆசைகளை அடைந்து வருவதாகவும் இவர்களில் சமூக விரோத செயற்பாடுகளின் காரணமாகவே முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்களிடமிருந்து பிரிந்து தேசிய காங்கிரஸை உருவாக்கி சமூகம் சார்ந்த பணிகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.

சிலர் தங்களது அரசியல் நலன்களுக்காக, பிட்டும் தேங்காய் பூவுமாக இருந்த; கல்முனை தமிழ் முஸ்லிம் சமூகத்தினரை விரோதிகளாக்கி வைத்துள்ளதாகவும் சிலர் கல்முனை தமிழர்களை வங்களாதேசில் இருந்து வந்தவர்களைப் போன்று பார்ப்பதாகவும் நாங்கள் எல்லா சமூகத்தினருடனும் இணைந்தே வாழவேண்டும் என்றும் தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது 86000 க்கு மேற்பட்ட வாக்குகளை புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டர் சின்னம் பெற்றதாகவும் அந்த வாக்குகளுடன் இன்னும் சற்று அதிகமான வாக்குகளை கட்சி பெறுமாக இருந்தால் முழுமையாக மூன்று பிரதிநிதிகளைப் பெறக்கூடிய வாய்ப்பு புதிய ஜனநாயக முன்னணிகே இருப்பதாகவும் தெரிவித்தார்.

திகமடுல்லவில் இன விகிதாசார அடிப்படையில் முஸ்லிம்கள்-04 ஆசனங்களையும் சிங்களவர்கள்-02ஆசனங்களையும் தமிழர்கள்-01 ஆசனத்தையும் பெறவேண்டும் என தெரிவித்த சப்ராஸ், வெற்றுக் கோஷங்களுக்கு அடிபணிந்து விடாது சிந்தித்து தங்களது வாக்குகளை பிரயோகிக்குமாரும் கேட்டுக்கொண்டார்.

 




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :