பிரபல ஊடக ஆளுமைகள் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்ட இவ்விருது விழாவுக்கு பிரதம அதிதியாக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாஷிம் உமர் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதிகளாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் மற்றும் தினகரன், தினகரன் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியர் தே. செந்தில் வேலவர் ஆகியோர் கலந்து கொடிருன்தனர்.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் விஷேட பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றினார்.
முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் புதல்வியும் ஏ.ஆர்.மன்சூர் பௌண்டேசனின் தலைவியும் அவுஸ்த்ரேலியா நாட்டின் பெண்கள் கவுன்சிலின் தலைவியும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான திருமதி மரியம் நளிமுத்தீன் நிகழ்வு தொடர்பான கருத்துக்களை முன்வைத்தார்.
இந்நிகழ்வின்போது விருதுகளை பெற்றவர்களின் பெயர்களில் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட ஒருவருக்கு ஹாஷிம் உமர் பௌண்டேசன் சார்பில் அதன் ஸ்தாபகர் புரவலர் ஹாஷிம் உமர் மடிகணணி ஒன்றை வழங்கி வைத்தது விஷேட அம்சமாகும்.
நிகழ்வுக்கு பிரதான ஊடக அனுசரணையை தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரி வழங்கியிருத்த அதேவேளை வேறு பல நிறுவனங்களும் இணை அனுசரணைகளை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
(இந்த நிகழ்வில் இம்போர்ட் மிரர் ஊடக வலையமைப்பு,கிழக்கின் சிறந்த இணையத்தள ஊடகத்துக்கான விருதைப் பெற்றுக்கொண்டது. நன்றி ஸ்கை தமிழ்)
0 comments :
Post a Comment