கல்முனை ஆதார வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணராக மருத்துவர் அன்ரன் சுவர்ணன் பதவியேற்பு



வி.ரி. சகாதேவராஜா-
ல்முனை ஆதார வைத்தியசாலையின் புதிய சத்திர சிகிச்சை நிபுணராக மருத்துவர் அன்ரன் சுவர்ணன் நேற்று முன்தினம் பதவியேற்றார்.

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சேவையாற்றிய இவர் இடமாற்றம் பெற்று இங்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த இவர் புனித மைக்கல் கல்லூரியில் பயின்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டப் படிப்பை பூர்த்தி செய்து கொழும்பு பல்கலைக்கழகத்தில்
MD மருத்துவ முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார்.

ஐக்கிய இராட்சியத்தில் அறுவை சிகிச்சையில் வெளிநாட்டு பயிற்சி பெற்ற இவர் மேலும் MRCS(Edinborough),MRCS(Glasgow) போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார் .
அதி விசேட பயிற்சிகளை வயிற்றறை உட்காண் அறுவைச் சிகிச்சை (பெருங்குடல் நேர்குடல்),ரோபோடிக் முறை அறுவைச் சிகிச்சை.Specially trained in colorectal surgery in laparoscopy and Robotic surgery பெற்றுள்ளார்.

இங்கு ஏலவே இருந்த சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் சமீம் இடமாற்றலாகிச் சென்ற இடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :