பாராளுமன்றத்தில் பெருப்பான்மையினைப் பெற்றுக்கொள்ளும் என ஐக்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.ஹசன் அலி தெரிவித்தார்.
சம்மாந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற இளைஞர்களுடனான சந்திப்பின் போது உரையாற்றுகையிலே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்...
ஜானாதிபதி தேர்தலினைத் தொடர்ந்து இடம்பெற்ற எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியினால் பெரும்பான்மையை பெற்று ஆட்சியமைக்க முடியாமல் போயுள்ளது. இவ்வாறான நிலையில் அவர்களால் பாராளுமன்ற தேர்தலில் எவ்வாறு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியும். 30 ஆசனங்களை கொண்ட எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 15 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டாலும் எதிர்கட்சியின் ஆதரவில்லாமல் அவர்களால் ஆட்சியமைக்க முடியாது.
பிரதேச சபை தேர்தலில் தனித்து ஆட்சியமைக்க முடியாத தேசிய மக்கள் சக்தி எவ்வாறு பாராளுமன்ற தேர்தலில் அதிகமாக ஆசனங்களை பெற்று ஆட்சியமைப்பது. எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் தேசிய மக்கள் சக்திக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளமை புலனாகிறது. இது நாட்டு மக்களுக்கு முக்கியமானதொரு செய்தியை சொல்லியிருக்கிறது. இதே போன்றுதான் பாராளுமன்ற தேர்தலிலும் அவர்களால் அதிகமான ஆசனங்களை பெற்று ஆட்சியமைக்க முடியாது.
எதிர்க்கட்சிகளின் ஆதரவில்லாமல் ஒருபோதும் தேசிய மக்கள் சக்தியால் ஆட்சியமைக்க முடியாது. இதனை எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளது. இன்று நாட்டில் தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் ஆதரவு குறைந்து வருகிறது. நாட்டு மக்களின் பெரும்பான்மை வாக்குகள் அவர்களுக்கு எதிராகவே அளிக்கப்படுகிறது. இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை விட ஐக்கிய மக்கள் சக்தியே அதிகமான ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும். சஜித் பிரேமதாசவே இந்த நாட்டின் அடுத்த பிரதமராக தெரிவாகும் சந்தர்ப்பம் உள்ளது.
குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் வாழ்கின்ற மூவின மக்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கே வாக்களிக்க தீர்மானித்துள்ளனர். அம்பாரையிலும் ஐக்கிய மக்கள் சக்தி இம்முறை மாவட்டத்தை வென்று மூன்று ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் என்றார்.
0 comments :
Post a Comment