தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களின் வைத்திய சேவையை வளப்படுத்துங்கள் தேசிய ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவர் ஏ எல் சுகத் பிரசாந்த்த



ஹஸ்பர் ஏ.எச்-
மிழ் ,சிங்கள ,முஸ்லிம் மக்களின் வைத்திய சேவையை வளப்படுத்துங்கள் என தேசிய ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவர் ஏ. எல் .சுகத் பிரசாந்த தெரிவித்தார்.

திருகோணமலையில் இன்று (03) காலை இடம் பெற்று ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை வெளிப்படுத்தும் வகையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலை பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றனர் அவற்றை நிவர்த்தி செய்வதன் மூலமாகவே சரியான வைத்திய சேவையை மக்களுக்கு வழங்க முடியும்.

கடந்த மூன்று நான்கு மாதங்களாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன அந்த பிரச்சினைக்கு அரசாங்கம் தகுந்த முடிவினை எடுக்கவில்லை.
இதனால் தமிழ், சிங்கள ,முஸ்லிம் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அந்த போதனா வைத்திய சாலையில் உள்ள பணிப்பாளர் தமது சேவை செய்வதும் இல்லை அங்கு உள்ள பணியாளர்களை வேலைகளை செய்யுமாறு கூறுவதும் இல்லை என குற்றச்சாட்டப்படுகின்றது.

இந்த போதனா வைத்திய சாலையில் வைத்திய பணிப்பாளர் பல வருடங்களாக இருப்பதனால் அவர் எல்லோரையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றார்.
இவர் இருப்பதனால் இந்த வைத்தியசாலை சரியான முறையில் இயங்காமல் இருக்கிறது என்று குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. வைத்திய பணிப்பாளர் என்ற பெயரளவில் மட்டும் தான் இருக்கின்றார் அவருக்கு கீழ் உள்ள உதவியாளர்கள் தான் இவர் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் செய்கின்றார்கள்.
வைத்திய பணிப்பாளர் தன்னுடைய வேலையை சரியாக செய்யாததனால் வைத்தியசாலை சீரழிந்து காணப்படுகின்றது. அங்குள்ள வைத்தியர்கள் உட்பட ஏனைய பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி அவர்களே நீங்கள் பிறந்த ஊரான அனுராதபுரம் தம்புத்தேகமா உங்கள் ஊர் என்று இல்லாமல் இவ்வாறான பிரச்சினைக்கு தகுந்த தீர்வினை பெற்று தர வேண்டும்.
கிழக்கு மாகாண உட்பட ஏனைய மாகாணங்களில் இருந்தும் வைத்திய சேவைக்காக இங்கு வருகின்றார்கள். எல்லா இன மக்களும் வைத்திய தேவைக்காக வருகின்றார்கள்.
இந்த நோயாளர்களின் நலம் கருதி குறைகள் களையப்பட வேண்டும் இந்த வைத்திய சாலையின் குறைபாடுகள் சம்பந்தமாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டபோது சரியான தகவல்கள் எங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை
இங்கு மலசல கூடங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை பாரிய ஒரு பிரச்சினையாக உள்ளது.
எனவே நோயாளர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி இந்த வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு முன்வர வேண்டும் என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :