சவூதி நிதியுதவியுடன் இலவச கண்புரை (CATARACT) இலவச சத்திர சிகிச்சை முகாம்



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
வூதி அரேபியாவின் நிவாரணம் மற்றும் மனிதநேயப் பணிகளுக்கான மன்னர் சல்மான் மையம், அல் பஷர் சர்வதேச அமைப்புடன் இணைந்து நடாத்தும் இலவச கண்புரை (CATARACT) சத்திர சிகிச்சை முகாம் எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் 16 ஆம் திகதி சனிக்கிழமை வரை ஹம்பாந்தோட்டை மற்றும் காத்தான்குடி பகுதிகளில் நடைபெறவுள்ளது.

அந்தவகையில், சத்திர சிகைச்சைக்கு நோயாளர்களைத் தெரிவு செய்யும் பரிசோதனை முகாம்கள் பின்வரும் இடங்களில் நடைபெறவுள்ளன.

இன்றைய தினம் (29) காலை 9 மணிக்கு கொழும்பு மருதானை ஏ.எம்.வை.எஸ்(AMYS) சிலும் மாலை 4 மணிக்கு தெஹிவளையிலுள்ள மஸ்ஜித் பாவக்கரிலும் இடம்பெறும்.
அதுபோன்று நாளை 30 புதன்கிழமை காலை 9 மணிக்கு பொல்கஹவெலயில் அமைந்துள்ள கல்யாண மண்டபம், பண்டாவ என்ற இடத்திலும் மாலை 4 மணிக்கு ஓட்டமாவடி தாருஸ்ஸலாம் பள்ளிவாசலிலும் இடம்பெறும்.

நாளை மறுநாள் 31ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலும் அன்றைய தினம் மாலை 4 மணிக்கு கல்முனை ஆதார வைத்தியசாலை (வடக்கு) யிலும் இடம்பெறும்.

எனவே, கண்புரை (CATARACT) சத்திர சிகிச்சை செய்ய உள்ளவர்கள் மேற்கூறிய இடங்களில் தங்களைப் பரிசோதித்து பதிவு செய்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :