எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான சிலிண்டர் சின்னத்தில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் கலந்துகொண்ட மாளிகைக்காடு தேர்தல் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பு, 2024.10.16 ஆம் திகதி மாலை காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் ஏ.எம்.ஜாஹிர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் மேற்படி கருத்துக்களை வெளியிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், தற்போதைய ஜனாதிபதி பதவியேற்றதும் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் தங்களது கடமை நிமிர்த்தம் உபயோகித்த வாகனங்களை காலிமுகத்திடலில் தரிக்கவைத்து படம் ஒன்றைக் காட்டினார்கள், தற்போது அந்த வாகனங்கள் எங்கே என மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
குறித்த வாகனங்கள் புதிய ஜனாதிபதி மற்றும் அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது புதிய விடயம் இல்லை என்றும் எதிர்கட்சி அரசியலில் பழகிப்போனவர்கள், ஆட்சி தங்களது கைக்கு வந்தவுடன் அதனைக் கொண்டுசெல்ல கஷ்ட்டப்படுகின்றனர் என்றும் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மிகக்கஷ்ட்டமான காலத்தில் நாட்டை கையேற்று மக்களின் வலியைக் குறைத்ததாகவும் அவரால் சேகரித்து வைக்கப்பட்டவைகளே இப்போது செலவிடப்படுவதாகவும் ஆட்சியைக் கையிலெடுக்குமுன் கூறிய System change என்ற கதையாடல் படிப்படியாக குறைந்து வருவதாகவும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான காத்திரமான முன்னெடுப்புகள் எதனையும் காணவில்லை என்றும் தெரிவித்தார்.
தான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி குறுகிய காலத்துக்குள் அம்பாறை மாவட்டத்தில் நீண்ட காலமாக தீர்க்கப்படாதிருந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றதாகவும் விசேடமாக பொத்துவில் மக்களின் பாரிய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடிந்ததாகவும் கடந்த ஆட்சியில் தன்னால் முடிந்த அளவில் அம்பாறை மாவட்டத்தில் அநேகமான பிரதேசங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை செய்து வேலைத்திட்டங்களை செய்த்ததாகவும் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் தனக்குக்கிடைத்த குறுகிய கால எல்லைக்குள் பல்வேறு வேலைத்திட்டங்களை செய்துள்ள போதிலும் மக்களது தேவைகள் இன்னும் நிலுவையில் இருப்பதாகவும் அவைகளை நிறைவேற்ற மக்கள் சந்தர்ப்பம் வழங்கினால் அவைகளையும் நிறைவேற்ற முடியும் என்றும் தெரிவித்தார்.
நிகழ்வின்போது இம்முறை திகாமடுல்ல மாவட்டத்தில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் லோயிட்ஸ் ஆதம் லெப்பை உள்ளிட்ட பலரும் கருத்துக்களை முன்வைத்தனர்.
0 comments :
Post a Comment