சீன அரசினால் வருமானம் குறைந்தவர்களுக்கு 1996 வீடுகள்



சீன அரசாங்கத்தின் நிதியுதவி திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 1,996 வீடுகளை நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீடுகளை 3 சீன நிறுவனங்கள் நிர்மாணிக்கவுள்ளன.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் நிலையான கொள்முதல் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இதற்கான ஒப்பந்தங்களை வழங்குவதற்கு, கிராமிய, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முதலாவது தொகுதி மொரட்டுவயில் 575 வீடுகள் மற்றும் கொட்டாவை 108 வீடுகள் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் M/s Chaina Railway 25 th Bureau Group Co.Ltd க்கு வழங்கவும், இரண்டாவது தொகுதி தெமட்டகொடை 586 வீடுகள் மற்றும் மஹரகமவில் 112 வீடுகள் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் M/s Chains Harbor Engineering Company Ltd க்கு வழங்கவும், மூன்றாவது தொகுதி பேலியகொடையில் 615 வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் M/s Shanxi Construction Investment Group Co Ltd க்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ள்து.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :