32 வருட அரச சேவையில் இருந்து வரதராஜன் ஓய்வு !



வி.ரி. சகாதேவராஜா-
காரைதீவைச் சேர்ந்த சிரேஸ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் மயில்வாகனம் வரதராஜன் தனது 60 வது வயதில் 32 வருட கால அரச சேவையில் இருந்து (14.11.2024) ஓய்வு பெறுகிறார் .

இவர் 1992 ஆம் ஆண்டு கொழும்பு ஆட்பதிவுத் திணைக்களத்தில் இலிகிதராக இணைந்து ஒன்பது வருடங்கள் பணியாற்றினார் .
அதன் பின்பு அம்பாறை மாவட்ட செயலகம் காரைதீவு பிரதேச செயலகம் நிந்தவூர் பிரதேச செயலகம் ஆகிய இடங்களில் 23 வருடங்கள் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமை ஆற்றினார்.

ஆரம்பக் கல்வியை ராமகிருஷ்ணசங்க ஆண்கள் பாடசாலையிலும் பின்னர் விபுலானந்த மத்திய கல்லூரியிலும் மற்றும் மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்திலும் கல்வி பயின்றார்.
பெற்றவராவார்.

இலங்கை முகாமைத்துவ சேவையின் முதலாந்தர உத்தியோகத்தராவார்.

காரைதீவு விபுலானந்தா ஞாபகார்த்த பணிமன்றம் இந்துசமய விருத்திச்சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகளில் இயங்கி வரும் முன்னணி சமூக செயற்பாட்டாளராவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :