பாராளுமன்ற பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 87,031 வாக்குகளைப் பெற்று இரு ஆசனங்களையும்,ஐக்கிய மக்கள் சக்தி 53,058 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும்,இலங்கை தமிழரசுக் கட்சி 34,168 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சாமிந்த ஹெட்டியராச்சி தெரிவி்த்தார்.
தேசிய மக்கள் சக்தியில் அருண் ஹேமச்சந்திரா மற்றும் ரோசான் அக்மீமன ஆகிய இரு உறுப்பினர்களும்,ஐக்கிய மக்கள் சக்தியில் இம்ரான் மகரூபும்,இலங்கை தமிழரசுக் கட்சியில் கே.எஸ். குகதாசனும் தெரிவு செய்யப் பட்டுள்ளனர்.
அருண் ஹேமச்சந்திரா 38368 வாக்குகளையும்,ரோசான் அக்மீமன 25814 வாக்குகளையும்,இம்ரான் மகரூப் 22779 வாக்குகளையும், கே.எஸ்.குகதாசன் 18470 வாக்குகளையும் பெற்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இத்தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுடைய வேட்பாளர்களின் விருப்ப வாக்குகள் பின்வருமாறு அமைகின்றன.தேசிய மக்கள் கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்களில் அருண் ஹேமச்சந்திரா 38,368,ரோசான் அக்மீமன 25,814,இந்திக பிரியதர்சன 23,587,எம்.ஈ.எம்.ராபீக் 18,127,எம்.கே.எம்.சப்ரான் 17,247,கே.ஷீலா 9729,சௌகன் ராஜேந்திரன் 4921 ஆகியோர் வாக்குகளைப் பெற்றனர்,
ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட இம்ரான் மகரூப் 22,779,ஹில்மி மகரூப் 19,528,எம்.எஸ்.தௌபீக் 17958,ஜே.எம்.லாஹிர் 10,380,ஏ.கே.ரணசிங்க பண்டா 4370,கே.எப்.பியந்த பிரமகுமார 3268,ஏ.பிரான்சிஸ் சேகர் 1344 ஆகியோர் வாக்குகளைப் பெற்றனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியில் கே.எஸ்.குகதாசன் 18,470,ரீ.துஷ்யந்தன் 9473,கே.ஜீவரூபன் 8352,கே.சுந்தர லிங்கம் 5774,கே.கோகுல்ராஜ் 3073,ஏ.யதீந்திரா 2935,கே.தேவகடாட்சம் 1574 ஆகியோர் வாக்குகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment