திகாமடுல்ல மாவட்டமும் அனுர வசம்! ஆக 88 வாக்குகளால் சிலிண்டர் தோல்வி.



வி.ரி.சகாதேவராஜா-
டைபெற்று முடிந்த பத்தாவது பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி நான்கு ஆசனங்களுடன் மாவட்டத்தை கைப்பற்றியது.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக தேசிய மக்கள் சக்தி அம்பாறை மாவட்டத்தை வெற்றிகொண்டுள்ளது.

அக் கட்சி ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 313 வாக்குகளை பெற்று நான்கு ஆசனங்களை பெற்றுக் கொண்டது .

அடுத்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 46,899 வாக்குகளைப் பற்றி ஒரு ஆசனத்தையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 33 ஆயிரத்து 911 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் இலங்கை தமிழரசுக் கட்சி 33 ஆயிரத்து 632 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.

மொத்தமாக 7 ஆசனங்களுக்காக 640 பேர் போட்டியிட்டார்கள்.
இலங்கை தமிழரசுக் கட்சியை விட ஆக 129 வாக்குகளால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்ந்திருந்தது.

அதேவேளை ஆக 88 வாக்குகளால் புதிய ஜனநாயக முன்னணி தோல்வியைத் தழுவியது.
இலங்கை தமிழரசுக் கட்சி 44632 வாக்குகளையும் புதிய ஜனநாயக முன்னணி 33544 வாக்குகளையும் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :