சாய்ந்தமருதின் முன்னாள் பிரதேச செயலாளராக இருந்த காலத்தில் A.L.M சலீம் அவர்கள் தமது வழமையான கடமைகளுக்கு அப்பால் பல்வேறு அரச மற்றும் அரச சார்பற்ற (NGO,INGO) நிறுவனங்களிடம் இருந்து திட்ட அறிக்கைகள் (Project proposal) மூலமாகவும் பல்வேறு முயற்சிகள் மூலமாகவும் எமதூருக்கான பல்வேறு அபிவிருத்திகளுக்கு நிதிகளை கொண்டு வந்து பல அபிவிருத்திகளை செய்தவர்.
ஒரு விடயத்தில் தொடர்ந்து முயற்சித்து இறைவன் உதவியுடன் அதனை வெற்றி காண்பதில் A.L.M சலீம் அவர்கள் மிகவும் உதாரணமானவர்.
அந்த வகையில் அவருக்கு கிடைத்த அதிகாரம் மூலமாக செய்த சேவைகளின் தொடர்ச்சியில் கல்விக்கான சேவைகள் இங்கு சில விடயங்கள் பட்டியலிடப்படுகிறது..
எதிர்காலத்தில் அவருக்கான அரசியல் அதிகாரம் ஊடாக பல்வேறு பிரதேசங்களும் அபிவிருத்தி காண பிரார்த்தித்தவர்களாக..
சாய்ந்தமருது பிரதேச செயலாளராக இருந்தபோது கல்வித் துறைக்கு செய்யமுடிந்த சேவைகள்..
சாய்ந்தமருது பிரதேச செயலாளராக வரும்பொழுது கோட்டத்தில் 7 பாடசாலைகள் காணப்பட்டது.
ஆனால் 9 படாசலைகளாக அதனை மாற்றியதுடன், பாடசாலை பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்ய முடிந்தது
1. எம். எஸ்.காரியப்பர் வித்தியாலயம் பொலிவேரியன் கிராமத்தில் சுமார் இரண்டு ஏக்கருக்கு மேற்பட்ட நிரப்பப்பட்ட காணியில் ஆரம்பிக்கப்பட்டது.
அதன் ஆரம்ப அதிபராக ஏ.எல். ஏ. நாபித் அவர்கள் செயற்பட்டார்.
ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் மூலம் சுமார் 100 மில்லியன் செலவில் பாரிய கட்டிடம் ஒன்றையும் பெற்றுக் கொடுத்தார்.
2. லீடர் அஷ்ரப் வித்தியாலயம்( பழைய மல்ஹருஸ்ஸம்ஸ் )
இதற்கான ஒத்துழைப்புக்களை முன்னாள் அதிபர் ஐ.எல்.ஏ. ரஹீம் அவர்கள் வழங்கியதுடன்
ஆரம்பகால அதிபராக மர்ஹும் ஹபீப் அவர்கள் செயற்பட்டார்.
நெக்டெப் மூலமாக பல மில்லியன் செலவில் பழைய கட்டிடங்கள் திருத்தப்பட்டு பிரதேச செயலகத்தினால் கையளிக்கப் பட்டது.
3. சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலையில் சுமார் 35 மில்லியன் செலவில் கூட்ட மண்டபத்துடன், 8 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் IOM என்ற நிறுவனத்தின் மூலமாக முன்னாள் மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் ஐ. எல். ஏ. மஜீத் அவர்கள் அதிபராக இருந்த போது பெற்றுக் கொடுக்க முடிந்தது.
இவ்வாறு சாய்ந்தமருது கோட்டத்தில் இருந்த அனைத்து பாடசாலைகளுக்கும் உதவி செய்ய முடிந்தது அம்மக்களுக்கு ஒரு பாக்கியமாகும்..
தொடரும்..
தொகுப்பு: Saleem Media Team
0 comments :
Post a Comment