மாவட்டத்தில் எல்லாத் தொகுதிகளையும் நாம் வெல்வோம்! கல்முனை எங்களுக்குக் கழுவி வரப் போகிறது!!- ஜனாதிபதி அனுர



ம்பாரைத் தொகுதியை மட்டும் வென்றால் போதாது. கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் போன்ற எல்லாத் தொகுதிகளையும் நாம் வெல்வோம். கல்முனை எங்களுக்குக் கழுவி வரப் போகிறது. ஏமாற்றும் அரசியல்வாதிகளை நிராகரித்து, முஸ்லிம் சமூகத்திற்கான புதிய அரசியல் தலைவர்களை உருவாக்குவோம்.

இந்த நாட்டில், முற்றிலும் புதிய அரசியல் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவோம். அதற்கு எங்களை வெற்றிபெறச் செய்யுங்கள். என்று

அம்பாரையில் 2024.11.04 ஆம் திகதி இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பேசிய முக்கிய விடயங்கள் வருமாறு:

நீங்கள் செப்டம்பர் 21 ஆம் திகதி தீர்க்கமான முடிவொன்றை எடுத்தீர்கள். இது சாதாரணமான தீர்மானம் அல்ல. மிக முக்கியமான அரசியல் தீர்மானம்.

இங்குள்ள அரசியல்வாதிகளைப் பார்த்தீர்களா? 46 வருடங்களுக்குப் பின்னர்தான் அரசாங்க வீட்டைத் திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள்.

(முன்னாள் அமைச்சர் பீ. தயாரத்ன ).

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வந்தால் என்னவெல்லாமோ நடக்கும் என்று பொய் சொன்னார்கள். அது எதுவும் நடக்கவில்லை.

இப்போது பொதுத் தேர்தல் வந்திருக்கிறது.

சென்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, ரணிலும் சஜித்தும் கிழக்கிற்குத்தானே அடிக்கடி வந்தார்கள்.

இப்போது வந்தார்களா? கூட்டம் நடத்தினார்களா? இங்கு வந்து பேசினார்களா?

கொழும்பில் இருந்துகொண்டு ஊடக சந்திப்புத்தான் நடத்துகிறார்கள். அதற்கு ஒரு மேசை, பெனர், மைக் போதும்.

3 மாசம் கூட இந்த அரசாங்கம் நின்று பிடிக்காது என்கிறார்கள். அப்படி என்றால் ஆட்சியை நாங்கள் பொறுப்பெடுத்திருக்க மாட்டோம்.

ஆனால், உண்மை நிலவரம் என்ன? ஜனாதிபதித் தேர்தலில் எமக்கு வாக்களிக்காதவர்கள் கூட, பொதுத் தேர்தலில் அதிகளவில் வாக்களிக்க இருக்கிறார்கள்.

அரசாங்கத்தின் மீதான மக்களது நம்பிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

கடந்த தேர்தலை விட, இம்முறை முஸ்லிம் மக்கள் அதிகளவு வாக்களிக்க இருக்கிறார்கள். தமிழர்களும் அதிகளவு வாக்களிக்க இருக்கிறார்கள்.

இதுவரை, முஸ்லிம் மக்கள், முஸ்லிம் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். சிங்கள மக்கள், சிங்களத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.

இப்போது எல்லோருக்குமான தலைவர்களை அவர்கள் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்.

மக்கள் மத்தியில் கலாச்சாரம், மொழி, மதம் சார்ந்து மட்டுமல்ல

அரசியல் தெரிவிலும் வேறுபாடு இருந்து வந்தது.

இந்த நாட்டில் ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை சந்தேகித்து வந்தது. இப்படி ஒருவர் மற்றவரை சந்தேகித்துக் கொண்டிருந்தால், இந்த நாட்டை எப்படி முன்னேற்றுவது?

பிரிந்தவர்களாக இல்லாமல், ஒற்றுமைப்பட்ட இலங்கையராக நாம் வெளிவர வேண்டும்.

தேசிய மக்கள் சக்தி ஒரு மாகாணத்திற்கு மட்டும் உரியதல்ல.

வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் நாடு தழுவி, ஒரே கட்சியாகவே நாங்கள் மக்களைச் சென்றடைந்தோம்.

மற்றவர்கள் அந்தந்தப் பிரதேசத்தின் ஆட்களைப் போல் குறுகி நடந்துகொண்டார்கள்.

சண்டை, சந்தேகம் கொண்ட நாடா?

சம உரிமை கொண்ட நாடா?

எது இங்கு தேவை?

நம் மக்களிடையே சமத்துவத்தைக் கட்டியெழுப்போம்.

எங்களை எதிர்த்து அரசியல் செய்வோரின் நிலைப்பாடு எப்படிப்பட்டது?

அவர்கள் எங்களது கிராமங்களை தொடர்ந்தும் வறுமையில் வைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அப்போதுதான் அவர்களால் அரசியல் செய்யலாம்.

நாம் எப்படிச் சிந்திக்கிறோம்?

கிராமிய மக்களது வறுமையை ஒழிப்போம்.

விவசாயத்தைக் கட்டியெழுப்புவோம்.

இப்போது விவசாயிகளின் வீடுகளில் நெல் இருக்கிறதா? இல்லை. எல்லோரும் விற்றுவிட்டார்கள்.

அடுத்த போகத்தில், சிறந்த விலையில் நெல்லைக் கொள்வனவு செய்யவுள்ளோம். நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் நல்ல விலைக்கு வாங்குவோம்.

இப்போது அதற்குத் தேவையான

களஞ்சிய வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம்.

அதேவேளை, கூட்டுறவுச் சங்கம், சதோச நிறுவனம் மூலம் மக்களுக்கு நியாய விலையில் அரிசியை விற்போம்.

இதற்காக சிறிய அரிசி ஆலை உரிமையாளர்களைப் பலப்படுத்துவோம்.

பாலுற்பத்தியை அதிகரிப்போம்.

பால் கொள்வனவு நிலையங்களை அதிகரிப்போம்.

உல்லாசப் பயணத் துறையை வளர்ப்போம்.

இந்த நாட்டை இதற்கு முன் ஆண்ட அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள்?

வறுமையும் கடன் சுமையும் மிக்க நாடாக மாற்றினார்கள்.

ஆனால், நாங்கள் இந்த நாட்டை சரியான முறையில் கட்டியெழுப்புவோம்.

எங்கள் வாழ்க்கை முழுவதும் இதைத்தானே கனவு கண்டு வந்திருக்கிறோம்.

இப்போது அதற்கு சந்தர்ப்பம் வந்திருக்கிறது.

இதை நாங்கள் செய்வோம்.

மக்களே, உங்களது நம்பிக்கையைப் பாதுகாப்போம்.

அடுத்த வருடம் மாகாண சபைத் தேர்தலை நடத்தவுள்ளோம்.

நாடாளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி மன்றங்கள் என்று, அடுத்தடுத்து அரசியல் அதிகாரத்தைப் பெற்று மக்களுக்கு உதவி செய்வோம்.

இப்போது பாராளுமன்ற அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

சக்திமிக்க பாராளுமன்றம் ஒன்றை உருவாக்குவோம்.

25 பேரைக் கொண்ட அமைச்சரவையொன்றை உருவாக்குவோம்.

தரமான, ஆற்றல் மிக்க அமைச்சரவையை உருவாக்குவோம்.

சுங்கத்திலிருந்து இலக்கமில்லாத வாகனங்களை முன்னைய அரசாங்க அமைச்சர்கள் இரகசியமாக வீதிக்குக் கொண்டு வருகிறார்கள்.

மக்களுக்கு ஒரு நீதி, அவர்களுக்கு வேறு நீதியா?

இதை மாற்றியமைக்க வேண்டும்.

தரம் வாய்ந்த அமைச்சர்களை உருவாக்க முனைகிறபோது, எதிர்த் தரப்பினர் குழம்புகிறார்கள்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் வசதிகளுக்கும் பங்களாவுக்கும் வாகனங்களுக்கும் எவ்வித கட்டுப்பாடும் இல்லை. இதைக் கட்டுப்படுத்துவது அரசியல் பழிவாங்கலா?

நிச்சயமாக இல்லை.

அறுகம்பைப் பிரதேசத்தில் தாக்குதல் திட்டம் ஒன்று பற்றிய செய்தி வந்தது. அப்போது பாதுகாப்பு சபையைக் கூட்டினோம். பொலிஸ், உளவுத் துறையைத் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுத்தோம். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினோம்.

இதைப் பொறுக்க முடியாமல், நீங்கள் ஏன் இப்படிச் செய்யவில்லை, அப்படிச் செய்யவில்லை என்று கேட்கிறார்கள்.

மக்களது பாதுகாப்பை உறுதிசெய்ய அரசாங்கப் பொறிமுறை ஒன்றுள்ளது. அதையே நாம் செய்தோம்.

சட்டத்தை அமுல்படுத்த நாங்கள் ஒருபோதும் தயங்க மாட்டோம்.

வெளிநாட்டுத் தூதுவர்கள் பலர் என்னை வந்து சந்தித்தார்கள்.

உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் தருகிறோம் என்று சொன்னார்கள்.

ஊழலைக் கட்டுப்படுத்துங்கள். நாங்கள் வெளிநாடுகளிலிருந்து முதலீட்டாளர்களைக் கொண்டு வருகிறோம் என்றார்கள்.

பொதுமக்கள் ஊழலற்ற ஆட்சியையே விரும்புகிறார்கள். அதையே நாம் வழங்குகிறோம்.

இந்தத் தேர்தலில் ஒரு உற்சாகம் இல்லை. ஏன் இது? உண்மையில் இங்கு போட்டிக்கு ஆளில்லை.

அம்பாரைத் தொகுதியை மட்டும் வென்றால் போதாது. கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில்

எல்லாத் தொகுதிகளையும் நாம் வெல்வோம். கல்முனை எங்களுக்குக் கழுவி வரப் போகிறது.

ஏமாற்றும் அரசியல்வாதிகளை நிராகரித்து, முஸ்லிம் சமூகத்திற்கான புதிய அரசியல் தலைவர்களை உருவாக்குவோம்.

இந்த நாட்டில், முற்றிலும் புதிய அரசியல் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவோம். அதற்கு எங்களை வெற்றிபெறச் செய்யுங்கள்.

இவ்வாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அம்பாரை பொதுக்கூட்டத்தில் கருத்துரைத்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :