வெலம்பொடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் திறந்தவெளி‌யரங்கு இன்று திறந்து வைக்கப்பட்டது



முனீரா அபூபக்கர்-
வெலம்பொடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான தொழிலதிபர் அல்ஹாஜ் J.M. ரம்சீன்‌ அவர்களால் சுமார் ஒரு மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட திறந்தவெளியரங்கு இன்று வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்காட்டுவதற்கு பொருத்தமான மேடை வசதிகள் இல்லாமை இது வரை காலமும் ஒரு பாரிய குறையாகக் காணப்பட்டது.

இதற்குத் தீர்வாக *அல்ஹாஜ் ஜே.எம்.ரம்சீன் அவர்கள் தனது காலஞ்சென்ற பெற்றோர்களான மர்ஹூம் ஜெய்னுல் ஆப்தீன்‌, மர்ஹூமா அமீரும்மா ஆகியோரின் நினைவாக இந்த திறந்தவெளி‌ மேடையை அமைத்துக் கொடுத்தார்‌*

இந்த மண்டபம் அல்ஹாஜ் ரம்சீன் அவர்களால் இன்றைய தினம்‌ வைபவ ரிதியாக திறந்து வைக்கப்பட்டு மாணவர்களின் பாவணைக்கு விடப்பட்டது.

மாணவர் நலன் கருதி இந்த உதவியை வழங்கியமைக்காக அதிபர் S.M. பைரூஸ் அவர்களால் பொண்ணாடை போர்த்தி கொளரவிக்கப்பட்டார்.

மேலும் கடந்த சாதாரண தரப்‌பரீட்சையில் சித்தியடைந்த 57 மாணவர்களும் பாடசாலையின்‌ ஆசிரியர்களும் இந்த நிகழ்வின் போது நினைவுச்சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் பாடசாலையின்‌ அதிபர், ஆசிரியர்கள்‌, பாடசாலை நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், கடந்த வருடம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின்‌பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :