தமிழ் தேசிய மக்கள் முன்னணி இளைஞர் தலைவர் புஷ்பராஜ் துசானந்தனின் தேர்தல் காரியாலயம் திறப்பு



பாறுக் ஷிஹான்-
திர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி இளைஞர் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் முதன்மை வேட்பாளருமான புஷ்பராஜ் துசானந்தனின் உத்தியோகபூர்வ தேர்தல் காரியாலம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

குறித்த தேர்தல் அலுவலகம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு காளி கோவில் வீதியில் வைத்து பிரதம விருந்தினராக கலந்து கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி இளைஞர் தலைவரும் முதன்மை வேட்பாளருமான புஷ்பராஜ் துசானந்தனினால் திறந்து வைக்கப்பட்டது.

தொடர்ந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரக் கூட்டமும் அங்கு ஒழுங்கு செய்யப்பட்டதுடன் சைக்கிள் சின்னம் இலக்கம் 6 இல் போட்டியிடும் தனக்கு ஆதரவு வழங்குமாறும் வாக்குகளை சிதறடிக்க வேண்டாம் என கூறியதுடன் ஒரு நாடு இரு தேசங்கள் இலக்கினை அடைய அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் ஒருமித்து வாக்களிக்காவிட்டால் அரசியல் அநாதைகளாக்கப்படுவர்.

நிச்சயமாக இந்த தேர்தலில் எமது கட்சிக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கின்றது. எமது கட்சி வடகிழக்கு உரிமைக்காக தொடர்ந்தும் குரல் எழுப்பி வருகின்றது. எமது தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணியினர் தமிழ் தேசிய இருப்புக்கு நேர்மையாக குரல் கொடுத்து வருகின்றார்கள். அவரது கரங்களை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த நாட்டின் புதிய ஜனாதிபதியை எவ்வாறு மக்கள் உருவாக்கினார்களோ அதே போன்று இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் புதிய மாற்றங்களை மக்கள் விரும்ப வேண்டும்.

குறிப்பாக வடகிழக்கில் உள்ள மக்கள் ஒன்று திரண்டு திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணியை தமிழர்களின் பெரும்பான்மை சக்தியாக கொண்ட தலைமைத்துவமாக அங்கீகரிக்க ஒரு வாய்ப்பை தருவார்கள் என்று நம்புகின்றேன். அதற்கு எமது அம்பாறை மாவட்ட மக்களும் ஒரு பங்குதாரர்களாக இருப்பார்கள். எங்கள் மாவட்டத்தின் தமிழர்களின் இருப்புகளை தக்க வைக்க வேண்டுமாயின் நிச்சயமாக மக்கள் அனைவரும் ஒரே தரப்புக்கு ஆதரவளிக்க வேண்டும் .

யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது. கடந்த காலங்களில் மக்கள் ஒரே தரப்புக்கு மாத்திரம் வாக்களித்து வந்தீர்கள் .ஆனால் மக்களின் இருப்பிலோ அல்லது வாழ்க்கையிலே எந்த விதமும் மாற்றமும் நடைபெறவில்லை. குறிப்பாக நமது கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தை அரசியல் மேடைகளுக்காக கடந்த 15 வருடங்களாக பயன்படுத்தி வருகின்றார்கள்.

ஒரு கணக்காளரை கூட அச்செயலகத்திற்கு நியமிக்க வக்கில்லாத ஒரு தரப்பினராக கடந்த காலத்தில் இருந்திருக்கிறார்கள். தொடர்ந்தும் மக்களின் உரிமை சார்ந்த பிரச்சனைகளை அவர்கள் அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.இவ்வாறான போலி தேசியவாதிகள் எமது உரிமைகளுடன் விளையாடுகின்றவர்கள் இந்த முறை நிராகரித்து ஒரு மாற்றத்தை நிச்சயமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு மக்கள் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தொடர்ந்து இந்த தேசத்தில் இடம்பெற்று கொண்டிருக்கின்ற அந்நிய ஆக்கிரமிப்பு என்றாலும் சரி பௌத்தமயமாக்கல் என்றாலும் சரி தொடர்ந்து குரல் கொடுக்கின்ற ஒரு தலைவராக திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இருக்கின்றார்.தேசியத்திற்காக மாத்திரம் இந்த தேர்தலில் நாங்கள் களமிறங்கவில்லை. உண்மையான தேசியத்திற்காகவே இந்த தேர்தலில் களம் இறங்கி இருக்கின்றோம் . தற்போதைய பாராளுமன்ற தேர்தலின் முக்கியத்துவம் வாக்களிப்பதன் ஊடாக தமிழ் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு பெற்றுக்கொள்வது கடந்த கால தேர்தல் தவறுகள் பருவ கால தேர்தல் வியாபாரிகளின் செயற்பாடுகள் எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்கள் உட்பட அரசியல் நிலவரங்கள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் அங்கு பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :