நுவரெலியா மாவட்டம் - வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டது



க.கிஷாந்தன்-
நுவரெலியா மாவட்டத்தில் இன்று மாலை நான்கு மணியுடன் வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் 534 வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் நிலையமான நுவரெலியா காமினி தேசிய கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

மேலும், 65 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குகளை எண்ணுவதற்காக நுவரெலியா காமினி தேசிய கல்லூரியில் வாக்கு எண்ணும் நிலையங்களும், நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தபால் வாக்குகள் எண்ணுவதற்காக வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாலை 04.00 மணி வரை வாக்களிப்பு சுமூகமாக இடம் பெற்றதோடு, 70% சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 308 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதோடு, 6 இலட்சத்து 5,292 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :