புனித மாவீரர் தினத்தை அரசியலுக்காக வியாபாரமாக்காதீர்கள்! ஊடகச் சந்திப்பில் சங்கு வேட்பாளர் பிரகாஷ் வேண்டுகோள்



வி.ரி.சகாதேவராஜா-
வ்வொரு தமிழனின் இதயத்திலும் நீங்கா இடம் பெற்ற புனித மாவீரர் தினத்தை அற்ப அரசியலுக்காக வியாபாரமா க்காதீர்கள்!

இவ்வாறு பாண்டிருப்பில் (9) சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் உரையாற்றிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் இராஜகுமார் பிரகாஷ் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

75 வருட கால புரையோடிப் போய் இருக்கின்ற எங்களது அரசியல் வரலாற்றில் நாங்கள் எப்போது மறக்க முடியாத நினைவாக இருக்கின்ற ஒரு உன்னதமான நாள்தான் கார்த்திகை 27. புனித மாவீரர் நாள்.
இந்த தினத்தை தற்போது கடந்த காலங்களில் அரசுடன் நின்று கொண்டு 50 50 எனும் உடன்படிக்கையில் பணியாற்றியவர்கள். அதன் மூன்றாவது சைக்கிள் தலைமுறையினர் தற்போது நாங்கள் மாவீரர்கள், நாங்கள் எங்களது உணர்வை காட்டுகின்றோம், எங்களது தேசியத்தை வெளிப்படுத்துகின்றோம் எனக் கூறிக்கொண்டு வருகின்றார்கள்.

வடக்கில் ஏழு மாவீரர் துயிலும் இல்லங்கள் இருக்கின்றன. ஆனால் இவர்கள் அங்கிருந்து அம்பாறை மாவட்டத்தில் உள்ளது ஒரேயொரு மாவீரர் துயிலும் இல்லமான கஞ்சி குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்திற்கு வருகிறார்கள்.
ஏன் என்றால் இவர்கள் அரசியல் செய்யவே வருகின்றார்கள்.
ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கலாம் எந்தவிதமான முன்னெடுப்புகளோ எவரும் செய்யவில்லை.

ஆனால் இந்த மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு இங்கு வந்துள்ளார்கள்.
தலைவராக சுப்ரமணியம் அண்ணன் அவர்களும் செயலாளராக குட்டிமணி மாஸ்டரும் நீண்டகாலமாக இந்த விடயத்தை கையில் எடுத்து எந்த விதமான சலசலப்புகளும் இன்றை எந்தவிதமான பெருமைத்தனங்களும் இன்றி எந்த விதமான விளம்பரங்களும் இன்றி இதை மனதார உளமார இதை செயல்படுத்தி வருகின்றார்கள்.

ஆகவே கடந்த ஓரிரு ஆண்டுகளாக புதிதாக முளைத்த சைக்கிள் அரசியல் வாதிகள் இதை நீங்கள் உங்களது அரசியல் லாபத்துக்காகவும் புலம்பெயர் தேசத்தில் உள்ள மக்களிடம் நிதி வாங்குவதற்காகவும் இந்த இடத்தை இந்த புனித பூமியை புனித மண்ணை புனித நாளை பயன்படுத்த வேண்டாம் என்பதை நான் ஆணித்தரமாக கூறிக்கொள்கின்றேன்

உங்களுக்கு தெரியும் இந்த கார்த்திகை மாதம் என்றாலே எங்களுக்கு ஞாபகம் வரும் கார்த்திகை 27 இது எக்காலத்திலும் எத்தனை தலைமுறைகள் வந்து போனாலும் எத்தனை மாதங்கள் நாங்கள் கடந்து சென்றாலும் எங்களது நெஞ்சில் ஆறாத வடுவாக எங்களது உள்ளத்தை போட்டு குடைந்து கொண்டு வருத்திக்கொண்டு எங்களை தினம் தினம் எங்களை வேதனைப்படுத்தி கொண்டு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும் விடயம் எங்களது மாவீரர் துயில்கின்ற ஒரு நாள் மாவீரர்கள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறார்கள் எங்களது மண்ணுக்காக தமிழ் இனத்திற்காக உங்களது தமிழ் அது வாழ்வியல் மொழி வழி தேசியம் இருப்பு போன்றவற்றை பாதுகாப்பதற்காக ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்கள் எங்களது அண்ணனாக தம்பியாக எங்களது சகோதரிகளாக நாங்கள் இழந்திருக்கின்றோம்.

இந்த மண்ணுக்கு விதையாகி இருக்கின்றோம். ஆகவே இந்த மாவீரர் துயரம் எனும் துயில்கின்ற விடயம் மாவீரர் துயிலும் நினைவு நாளான கார்த்திகை 27 அண்மையில் வர இருக்கின்றது.

இதனை அம்பாறை மாவட்டத்தில் வழி நடத்துவதற்கும் இதனை சிறப்பாக நடத்துவதற்கும் எங்களது மக்களுக்கு தலைமை தாங்குவதற்கும் மாவீரர் துயிலுமில்ல பணிக்குழு தலைவர் செயலாளர் இருக்கின்றார்கள். கடந்த ஏழு எட்டு வருடங்களாக அவர்களுடன் நான் சேர்ந்து இருக்கின்றேன்.
கடந்த வருடம் உடும்பன் குள படுகொலை.நாங்கள் பிப்ரவரி மாதத்தில் பாரிய எதிர்ப்புகளின் மத்தியில் இந்த உடும்பன் படுகொலை தினத்தை நாங்கள் எங்களது பாதிக்கப்பட்ட உயிர்களை இழந்த எரித்துக் கொல்லப்பட்ட உறவுகள் உடைய குடும்பத்தினர் கலந்து கொண்டிருந்தார்கள். அந்த உறவுகளின் தலைமைத்துவமாக செயற்பட்டு கொண்டிருக்கின்றேன்

இந்த வருடம் மட்டுமல்ல கடந்த வருடங்கள் அதற்கு முன்னே வருடங்களாக இருந்தாலும் இந்த களத்தில் நின்று இந்த மாவீரர் உறவுகளுடன் பயணித்து ஒருவன் என்ற வகையில் எனக்கு இதனை வெளிப்படுத்துவதற்கும் இதனை கூறுவதற்கு மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதற்கும் எனக்கு பூரண உரிமை உள்ளது என்பதை மக்கள் அறிவீர்கள் ஆகவே இந்த மாவீரர் தினமானது ஒவ்வொரு வீடுகளிலும் எங்களது தமிழ் உள்ளங்களிலும் அன்றைய நாள் ஒரு எழுச்சியான நாளாக எங்களது உறவுகளுக்கு நாங்கள் ஒரு அனுதாபத்தையும் அஞ்சலியையோ நாங்கள் வீடுகளில் இருந்தாவது செய்ய வேண்டும் இந்த வருடமும் நாங்கள் அந்த ஏற்பாடுகளை செய்வதற்கு நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் எதிர்வரும் கார்த்திகை 27 அன்று நாங்கள் அந்த புண்ணிய பூமியில் எங்களது தமிழ் இறந்த உறவுகள் எங்களது சரீரத்தின் ஒரு பாகமாக எங்களுக்காக மண்ணில் மடிந்த மாவீரர்களை நாங்கள் நினைவு கூருவதற்கு காத்திருக்கின்றோம். மக்களாக எங்களோடு ஒன்று சேருங்கள்.

 அடுத்ததாக இந்த காணாமல் ஆக்கப்பட்ட தாய்மாரை நான் ஒரு கணம் கௌரவிக்கின்றேன். ஏனெனில் கடந்த காலங்களில் எங்களின் மாவீரர் துயிலும் இல்லங்களில் அவர்கள் அவர்களது பாரிய பங்களிப்பினை செய்திருக்கிறார்கள். அதை நாங்கள் மறந்து விட முடியாது .நான் அவர்களுடனும் பயணிக்கும் ஒரு சேவகன் என்ற வகையில் அவர்களுக்கு பின்னே சென்று குரல் கொடுப்பவன் என்ற வகையில் நான் அம்பாறை மாவட்டத்தின் தலைவியாக இருக்கின்ற உடன்பிறவா சகோதரி அதுவும் ஒரு போராளி செல்வராணி அக்காவையும் நானும் மனதார பாராட்டுகின்றேன். அனைவரும் இணைந்து நாங்கள் கார்த்திகை 27 அன்று எங்களது உணர்வுகளை வெளிக்கொண்டு வரவேண்டும் என நான் உங்கள் வீட்டு பிள்ளையாக உங்களிடம் வேண்டுகிறேன்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :