சமஸ்தலங்கா தேசிய நடனப் போட்டியில் பற்றிமா மாதுமையாளின் இரண்டு நாடகங்கள் சாதனை



வி.ரி. சகாதேவராஜா-
ல்வியமைச்சினால் திருகோணமலையில் நடாத்தப்பட்ட தேசிய மட்டத்திலான அகில இலங்கை சமஸ்தலங்கா நடனப்போட்டி - 2024ல் கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் பிரபல நடன ஆசிரியை திருமதி மாதுமையாள் வரதராஜனின் நெறியாக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட புத்தாக்க நிகழ்ச்சிகளான இரு குழு நடனங்கள் இரண்டாமிடத்தினை பெற்றுள்ளன.

இப் போட்டி திருகோணமலையில் கடந்த 09 ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிகழ்வானது 1001 க்கு மேற்பட்ட மாணவர்களை கொண்ட பாடசாலைகளுக்கு இடையிலான போட்டியாக இடம்பெற்றது .
இதில் அனைத்து மாகாணங்களிலும் இருந்து வெற்றியீட்டிய நடனக்குழுக்கள் பங்குபற்றியிருந்ததோடு அவற்றில் இரண்டாமிடத்தினை இரு போட்டிகளிலும் பெற்றுக்கொண்டது விஷேட அம்சமாகும்.
குறித்த போட்டிக்கான பாடல் வரிகளை ஆசிரியர் யௌவனா வசந்தன் எழுதியதோடு பாடல் வரிகளை பாடியவர் பாடசாலை ஆசிரியர் திருமதி சரண்யா சிவநேசன் ஆவார் .

மேலும் போட்டிக்காக மாணவர்களை அழைத்துச்சென்று அவர்களுக்கு ஊக்கம்கொடுத்த பாடசாலையின் ஆசிரியர் எஸ்..நந்தகுமார் மற்றும் ஆசிரியர் எஸ்.தவசீலன் எமது பாடசாலை சமூகம் சார்பாக அதிபர் அருட் சகோதரர் ரெஜினோல்ட் நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு குறித்த போட்டி நிகழ்வினை நெறியாக்கம் செய்த ஆசிரியர்;, பாடல் வரிகளை எழுதிய, பாடிய ஆசிரியர்களும் மாவணவர்களை ஊக்குவித்து உதவிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார்.

மற்றும் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்கிய பெற்றோர் அனைவருக்கும் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.

125ஆவது ஆண்டிலே இக் கல்லூரி காலடி எடுத்து வைத்திருக்கும் இத்தருணத்தில் கல்விசார் விடயங்களிலும் சரி, இணைப்பாடவிதானங்களிலும் சரி வெற்றி மீது வெற்றிகளை அள்ளிக்குவித்துக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் பற்றிமா பழைய மாணவர்கள் தமது பாராட்டுக்களை தெரிவிக்கின்றனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :