மாணவனின் ஜனாஸா பெருந்திரளான மக்கள் வெள்ளத்தில் முஅல்லா மஹல்லாவில் நல்லடக்கம்.






நூருல் ஹுதா உமர்-

ஐந்து நாட்களுக்கு பின்னர் இன்று (30) காலை கண்டெடுக்கப்பட்ட நிந்தவூர் மத்ரஸா மாணவன் கலீல் தஷ்ரீக் அவர்களின் ஜனாஸா சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயம் மைதானத்தில் பெருந்திரளான மக்கள் வெள்ளத்தின் பிரசன்னத்துடன் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு சம்மாந்துறை முஅல்லா மஹல்லாவில் பெரும் திரளான மக்கள் மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

காரைதீவு - மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயிருந்த நிலையில் அன்றைய தினம் மாலை மீட்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கையின் போது 5 மாணவர்கள் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்பட்டனர். 

இந்த மீட்பு பணியில் பாதுகாப்பு படையினரும், மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பும் முழுமையாக ஈடுபட்டு வந்ததுடன் அவர்களுக்கு உதவியாக சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை மற்றும் காரைதீவு இளைஞர்கள் அமைப்பினரும் ஈடுபட்டிருந்தனர்.
 
வெள்ளம் தணிந்திருந்த போதிலும் மீட்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து ஐந்தாவது நாளாக இடம்பெற்று வந்தது. அதன்போது இதுவரை மொத்தமாக 08 ஜனாஸாக்கள் மீட்புப்பணியாளர்களினால் மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதில் நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி மாணவர்களின் 06 ஜனாசாவும், வாகன சாரதியின் ஜனாஸாவும், இன்னும் ஒரு இளைஞரின் ஜனாஸாவுமாக மொத்தம் 08 ஜனாஸாக்கள் மீட்கப்பட்டது. மீட்பு பணியாளர்களால் வெள்ளத்தில் காணாமல் போனவர்களை தொடர்ந்து தேடும் நடவடிக்கை இடம் பெற்று வந்த நிலையில் இன்று காலை இறுதியாக ஒரு ஜனாஸா கண்டெடுக்கப்பட்ருந்தது அதுவே நிந்தவூர் மதரஸா மாணவன் மௌலவி கலீல் தஷ்ரீப் அவர்களின் ஜனாஸா ஆகும்.
 
மத்ரஸா முடிந்து மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இந்த விபத்து நடைபெற்றுள்ளது. மீட்பு பணியின் போது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டும், உழவு இயந்திரமும் மீட்கப்பட்டதுடன், இதில் பயணித்தவர்கள் எத்தனை பேர், எத்தனை பேர் காணாமல் போனார்கள் என்பதை துல்லியமாக கூற முடியாத நிலை இருந்த நிலையில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டு வருகிறது. திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர் மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனைகள் முடிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஜனாஸாக்கள் கையளிக்கப்பட்டிருந்தது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :