கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் 94 - 97 பழைய மாணவர்களினால் ஒரு தொகுதி மலசல கூடங்கள் (16 மலசலகூடங்கள்) நவீன வசதிகளுடன் புனர் நிர்மாணம் செய்து கையளிக்கும் முதல் கட்ட வைபவம் நேற்று புதன்கிழமை (20) பாடசாலையில் இடம் பெற்றது.
கல்லூரியின் அதிபர் எம். ஐ. ஜாபிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 94 ஓ.எல். பிரிவிலும் 97 ஏ. எல். பிரிவிலும் கல்வி கற்ற பழைய மாணவர்களான எம்.எம்.எம். அம்ஸத், ஏ.எச். பௌசுல் அமீன், ஏ.சீ.ஏ. மஸாஹிர், ஏ.ஆர்.எம். றீசா ஆகியோர் கலந்து கொண்டு அதனை உத்தியோகபூர்வமாக அதிபர், ஆசிரியர் குழாம் மற்றும் மாணவர்கள் பாவனைக்கு உதவும் வகையில் கையளித்தனர்.
இப்பாடசாலையில் சுமார் ஒரு கோடியே 40 லட்சத்திற்கும் மேற்பட்ட செலவில் 40 மலசல கூடங்கள் நவீன முறையில் புனர்நிர்மாணம் செய்து கையளிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பாடசாலையின் முகாமைத்துவக் குழு மற்றும் பகுதித் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment