தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு!



லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்துக்கு 2022/2023 கல்வியாண்டின் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் தொடக்க நிகழ்வு, 2024.11.04 ஆம் திகதி முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா தலைமையில் ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் கலந்துகொண்டு உரையாற்றினார்.

முகாமைத்துவ வர்த்தக பீடத்திற்கு 2022/2023 கல்வியாண்டுக்காக 415 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர். குறித்த மாணவர்களை சிரேஷ்ட மாணவர்கள் உணவுகள் மற்றும் அன்பளிப்புகள் வழங்கி வரவேற்றது விஷேட அம்ஷமாகும்.

நிகழ்வின்போது மாணவர்கள் தொடர்பான ஆவணங்களை பதிவாளர் எம்.ஐ. நௌபர் மற்றும் சிரேஷ்ட உதவி பதிவாளர் எப். பாரிஷா எம் ஹசன் ஆகியோர் மாணவர்களுடன் சம்மந்தப்பட்ட துறைத்தலைவர்களிடம் ஒப்படைத்தனர்.

திணைக்களங்களின் தலைவர்களான சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல்.எம்.ஏ. சமீம், பேராசிரியர் கலாநிதி எஸ். சப்றாஸ் நவாஸ், பேராசிரியர் கலாநிதி எம்.ஏ.சி. சல்பியா உம்மா மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.சி.என். சபானா ஆகியோர் தாங்கள் சார்ந்த துறைகளில் இணைந்துள்ள மாணவர்கள் கையாளவேண்டிய நடைமுறைகள் மற்றும் குறித்த துறைகளின் ஊடாக மாணவர்கள் அடையக்கூடிய நன்மைகள் தொடர்பில் உரையாற்றினர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்திற்கும் CMA நிறுவனத்துக்கும் இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடும் நிகழ்வும் இங்கு இடம்பெற்றது.

முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் மாணவர் சங்க தலைவர் எம்.வி.எஸ்.கே. சில்வா புதிய மாணவர்களை வரவேற்றதுடன் சிரேஷ்ட மாணவர்களுடன் இணைந்து தங்களது சிறந்த கற்றல் செயற்ப்பாடுகளை தொடர முடியும் என்று தெரிவித்தார்.

மாணவர்களை வரவேற்று கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. பிரதி பதிவாளர் பி.எம். முபீன் நன்றியுரை நிகழ்த்தினார்.

நிகழவில் கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் மற்றும் இஸ்லாமிய அரபு மொழி பீட பீடாதிபதி அஷ்செய்க் எம்.எச்.ஏ. முனாஸ், நூலகர் எம்.எம். றிபாவுடீன், பேராசிரியர்கள், நிதியாளர் சி.எம். வன்னியாராச்சி, சிரேஷ்ட உதவி பதிவாளர் (சட்டம்) எம்.ஆர்.எம். சுல்பி விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் கல்விசாரா உதிதியோகத்தர்கள் மாணவர்கள் மற்றும் புதிதாக இணைந்துகொண்ட மாணவர்களின் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
































 





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :