வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிடுவதற்கு வட - கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வதற்கு அனுமதி வழங்குமாறு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை பாராளுமன்ற விவகார அமைச்சர் பிமல் ரத்நாயக்க விடம் கோரிக்கை.



எம்.ஜே.எம்சஜீத்-
த்தாவது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 162 புதிய உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திசை முகப்படுத்தல் செயலமர்வு (25,26,27 திகதிகளில்) பாராளுமன்ற சபாநாயகர் கெளரவ கலாநிதி அசோக்க ரன்வல தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

2வது நாளான இன்று நடைபெற்ற செயலமர்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கருத்து தெரிவிக்கையில் 162 புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு 2வது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ் வேளையில் வட - கிழக்கு மாகாணங்களில் பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு மக்கள் பாதிப்படைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்ப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்ல வேண்டியுள்ளது. எனவே வட - கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 

பாராளுமன்ற விவகார அமைச்சர் பிமல் ரத்நாயக்க அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் நியாயமான வேண்டுகோளை ஏற்றுக் கொள்வதாகவும். வட - கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை 27ம் திகதி நடைபெறும் செயலமர்வில் கலந்து கொள்ளத் தேவையில்லை எனவும் வேறு ஒரு தினத்தில் வட - கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு ஒன்றை பாராளுமன்ற செயலாளர் ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்க பணிப்புரை வழங்கினார். 

சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நழீம், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் Dr. அர்சுனா ஆகியோரும். வட - கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட அனுமதி வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :