கே. உங்களைப் பற்றி சொல்லுவீர்காளா?
ப. நான் மொஹமட் பஸ்ஸால், . கொழும்பு மாவட்டத்தில் ஜக்கிய தேசிய முன்னணி கட்சியில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றேன். எனது விருப்பு இல 14. சின்னம் முகத்தில அணியும் கண்ணாடி கூட்டமாகும். தெஹிவளையில் வசிக்கின்றேன். எனது கட்சித் தலைவர் ஜக்கிய தேசிய முன்னணிக் கட்சியின் தலைவர் மைத்திரி குணரத்ன ஜனாதிபதி சட்டத்தரணி (முன்னாள் ஆளுனர் மத்திய- ஊவா மாகாணங்களில் கடமையாற்றினாவர்.)
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் என்னை இரண்டு வருடங்கள் சிறையில் அடைத்தார்கள். கொவிட் காலத்தில் முஸ்லிம்களது ஜனசாக்களை பற்ற வைக்கும் போது நான் அதற்கு எதிராக குரல் கொடுத்தேன். குறிப்பாக எமது சமூகம் என்ற ரீதியில் அநீதி ஏற்பட்டால் முதலாவது குரல் கொடுப்பவன் நான்தான். அதற்காகவே அவர்கள் அரசாங்கத்தினை நான் தாக்குவதாகச் சொல்லி பயங்கரவாத தடைச் சட்டத்தீன் கீழ் இரண்டு வருடஙகளில் 1 வருடம் சி.ஜ.டி யிலும் மற்றைய வருடம் மகசின் சிறையிலும் அடைத்தார்கள்
அதிர்ஷ்டவசமாக கோட்டாபய ராஜபக்ச வின் அரசாங்கம் இரண்டு வருட காலத்தில் ஒழிந்தது. எனது கட்சியின் தலைவர் மைத்திரி குணரத்ன சட்டத்தரணி தான் எனக்கு பினை எடுத்துத் தந்தார். இவரே தான் டாக்டர் சாபிக்கும் பினை எடுத்துக் கொடுத்தவர். அதற்காக நான் அவருக்கு நன்றியுடையவனாக இருத்தல் வேண்டும்.
எனனை வேண்டுமென்றே கடந்த கால அரசு சிறையில் அடைத்தார்கள் எவ்வித வழக்குகளோ குற்றங்களோ எனக்கு இல்லை. கடந்த 4 வருடமாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்கிறார்கள். எவ்வித வழக்கும் இதுவரை இல்லை. எதிர்வரும் டிசம்பரில் எனக்கு நீதிமன்றத்தில் விசாரணை ஒன்று இருக்கின்றது. நான் பயங்கரவாதி என்றால் எனக்கு ஓர் தண்டனை வழக்கு இருத்தல் வேண்டும். அவ்வாறு இல்லை. எனது எழுத்துக்கள். எனது சமுக சிந்தனைகள் முஸ்லிம் மக்களுக்கு நடைபெறும் அநீதிகளை சுதந்திரமாக எவ்வித பயமுமின்றி ஊடகங்களிலும் சமுக வலைத் தழங்களிலும் மும மொழிகளிலும் பேசினேன். எழுதினேன். குரல் கொடுத்தேன் அதன் காரணத்திற்காகவே என்னை விசாரனை என்ற ரீதியில் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் வைத்து என்னை கைது செய்தார்கள்.
உங்களது அரசியல் நடவடிக்கைகள் என்ன?
நான் வெற்றியடையாவிட்டாலும் கொழும்பு மாவட்டத்தில் எனது தலைவர் மைத்திரி குணரத்ன அவர் கட்டாயம் பாராளுமன்றம் செல்லுதல் வேண்டும். அவர் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் .இந்த நாட்டில் பயங்கரவாதம் இனப்பிரச்சினைகள் மீண்டும் நடைபெறாதவாறு ஒழுங்கு சட்டம் கொண்டு வருதல் வேண்டும். இனப்பிரச்சினைகள் துாண்டுதல் அதில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வரப்படல் வேண்டும்.
இந்த நாட்டில் நடைபெற்ற ஜே.வி.பி, தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் அதன் பின்னர் அளுத்கம, கண்டி, திகன போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற இன பிரச்சினைகளில் இதுவரை யாரும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவில்லை. இவைகள் மீண்டும் நடைபெறாது என என்ன உத்தரவாதம் உள்ளது. ஆகவே தான் நாம் அதற்காக ஒழுங்கான ஓர் சட்டம் இந்த நாட்டில் இருத்தல் வேண்டும்.
சஹ்ரான் போன்ற 8 பேரை இயக்கி அப்பாவி கிறிஸ்தவ மக்களை கொலைசெய்யத் தூண்டிய உண்மையான குற்றவாளிகள் இனம் கண்டு அவர்களுக்கும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்
இந்த நாட்டில் உலக பயங்கரவாதியாக சித்தரிக்கின்ற இஸ்ரவேலர்கள் 10 அல்லது 20 டாலர் சுற்றுலாத்துறைக்கான இலங்கை வருகின்றனர் இவற்றினை இலங்கை அரசாங்கம் தடுத்தல் வேண்டும். பலஸ்தீன் நாட்டினையும் அழித்து அம்மக்களையும் அழிக்கும் இஸ்ரவேலர்களும் ஓர் பயங்கரவாதிகள் அவர்கள் இலங்கை நாட்டுக்கு அழைத்து அவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கக் கூடாது..
அவர்களுக்கு விசா வழங்குவதை இலங்கை அரசங்கம் தடுத்தல் வேண்டும். அவர்கள் சட்டவிரோதமாக பலஸ்தீன் நாட்டினை பிடித்தவர்கள். இவர்களுடன் நட்பு கொள்வதனை விட்டு உலகில் உள்ள முஸ்லிம் அரபு நாடுகளை நாம் கவர்ந்து அவர்களை இந்த நாட்டுக்கு சுற்றுலாப் பிரயாணிகளாக நாம் கொண்டு வருதல் வேண்டும். அந் நாட்டவர்கள் ஒர் நாளைக்கு 300 அல்லது 500 டாலர் எமது நாட்டில் செலவழிக்கக் கூடியவர்கள் அவர்கள் நாடுகளில் தான் நமது நாட்டவர்கள் 10 இலட்சம் பேர் தொழில் செய்கிறோம் இந்த நாட்டின் பொருளாதாரத்தில் 10 வீத அன்நியச் செலவானியை எமது நாடு பெறுகின்றது. . அவர்களிடம் நாம் சிறந்த நட்பு வைததுக் கொண்டால் அவர்கள் இலங்கைக்கு பாரிய நீர் விநியோகம், பல்கலைக்கழகங்களில் வைத்தியத்துறை வைத்தியசாலைகளில் பாரிய நோய் வாட்டுக்களை நிர்மாணித்து தருவார்கள் ஏற்கனவே அவர்கள் அதனைச் எமது நாட்டுக்குச் செய்து கொடுத்துள்ளார்கள். . அவர்கள் இலங்கைக்கு பெற்றோல் கேஸ் போன்ற எரிபொருட்கள் எமக்கு வட்டியில்லாமல் இலகு கடன் அடிப்படையில் நிபந்தனை அற்ற கடனில் வழங்குவார்கள்.
அரபு நாட்டவர்கள் தற்பொழுது மலேசியா போன்ற நாடுகளுக்கு பெருமளவில் சுற்றுலாப் பிரயாணிகளாகச் செல்கின்றனர். இதற்கு காரணம் அங்கு முற்று முழுதாக ஹலால் உணவு உள்ளது. இலங்கையிலும் சுற்றுலாத் துறையில் உள்ள சிங்கள கிறிஸ்தவர்கள் முழுதாக ஹலால் உணவு அறிமுகப்படுத்தினால் அராபியர்கள் பெரும்பாலோனோர் இங்கு வருவார்கள்.
அத்துடன் முதலிடவும் அவர்கள் வரமுடியும். அதற்கான நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
பலஸ்தீன் நாட்டுக்காக நாம் குரல் கொடுத்து அதனை மீட்டெடுத்து அங்கு நாம் புனர் நிர்மாணம் பணிகளுக்கு எமது நாட்டவர்கள் தொழில் செய்ய முடியும். அதனை விடுத்து பலஸ்தீனர்கள் விரட்டி அவர்களது மாமிசத்தில் நாம் உண்ணுவதற்கு சமம் நமது நாட்டில் இருந்து 2500 ஊழியர்கள் இஸ்ரவேலில் தொழில் செய்யச் சென்றிருப்பது வெறுக்கத்தக்க தானதொரு விடயமாகும்.
கடந்த காலங்களில் இந்தியா எமது நாட்டுக்கு உதவி செய்தாலும் அவர்கள் ரசியாவிடம் 100 ருபாவுக்கு வாங்கிய பெற்றோலை எமக்கு 200க்கு விற்கும் கைங்கரியத்திலேயே இறங்கினார்கள். அவர்கள் வடக்கில் இருந்து ராமேஸ்வரம் பாலம் அமைப்பது மீண்டும் கச்ச தீவினைக் கேட்பது, தமிழ் நாட்டு மீனவர்கள் எமது வடக்கு மீனவர்களது மீன்களை இங்கு களவாக பிடித்துச் செல்வது எமது நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் செயலாகும்.
நாம் சுயாதீனமாக சுதந்திர மானதொரு நாடு அதற்காக அண்டை நாடுகளுடன் நட்புறவுடன் இருப்பது உலக வழமையாகும். அதற்காக இந்தியா உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது. எனக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் எமது கட்சியான ஜக்கிய தேசிய முன்னிக் கட்சியை நீங்கள் தெரிவு செய்து எனது இலக்கம் 14 மற்றும் எனது தலைவர் ஜனாதிபதி சட்டத்தரனி மைததிரி குணரத்தின வினையும் வெற்றிபெறச் செய்தல் வேண்டும் எங்கள் சின்னம் முகத்தில் அணியும் கண்ணாடியாகும்
0 comments :
Post a Comment