வன்முறை சிந்தனையை இளைஞர்கள் மத்தியில் இல்லாதொழித்து சமூக நல்லிணக்கத்தை எற்படுத்தும் நோக்கில் கப்சோவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வருட செயற்திட்டத்தின் மாவட்ட மட்ட மாவட்ட நிகழ்வு இன்று சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட ரீதியில் அமுல்படுத்த இந்நிகழ்வானது கப்சோ நிறுவனத்தின் பணிப்பாளர் காமில் இம்டாட் தலைமையில் இடம் பெற்றதுடன் 'வன்முறைகளை தவிர்க்கும் இளைஞர்கள்' எனும் தொனிப்பொருளிலான வீதி நாடகம் ஒரு வருட காலமாக செயற்பட்டு வந்த 300க்கு மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் ஊடக இளைஞர்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட கண்காட்சி கூடாரங்கள் என்பனவற்றின் மூலம் சிறப்பித்து பயிற்சி நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜெகராஜன், சிறப்பு அதிதியாக சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, அம்பாறை, தமன மற்றும் அக்கரைபற்று பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலக இளைஞர் மன்ற செயற்பாட்டாளர்கள் உட்பட ஹெல்விடாஸ் நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment