இது பற்றி ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் ஊடக பேச்சாளர் முபாறக் முப்தி தெரிவித்ததாவது,
ஜனாதிபதி அநுரகுமாரவின் அரசாங்கத்தின் அமைச்சரவை மிகவும் பாராட்டத்தக்கதாக உள்ளது. இரண்டு தமிழர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டமை மூலம் தமிழ் மக்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனாலும் இன்றைய அமைச்சரவை நியமிக்கப்படும் நிகழ்வில் யார் முஸ்லிம் அமைச்சர் என்பதை முழு முஸ்லிம்களுடன் ஆவலுடன் எதிர் பார்த்தனர்.
ஆனாலும் எவரும் நியமிக்கப்படாதது கவலைக்குரியதாகும். இது விடயம் முஸ்லிம் சமூகத்தின் கடுமையான கவலையை ஏற்படுத்தியுள்ளது என்பதை சமூக வலையத்தளங்கள் சொல்கின்றன. முதல் நிகழ்விலேயே இந்நியமனம் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனாலும் இன்னமும் காலதாமதம் ஆகவில்லை.
ஆகவே கௌரவ ஜனாதிபதி அவர்கள் உடனடியாக முஸ்லிம் ஒருவரை அமைச்சராக நியமிப்பதுடன் முஸ்லிம் சமய விவகாரத்துக்கென பிரதி அமைச்சு ஒன்றை உருவாக்கும்படியும் ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கௌரவ ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறது.
0 comments :
Post a Comment