சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஏறாவூரை சேர்ந்த பொறியியலாளர் எம்.எஸ். நளீம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் ஆலோசனையின் பேரில்
கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் இவரது பெயரை பரிந்துரை செய்து தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளரான இவர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏறாவூர் பிரதேச அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்திருக்கும் ஒரேயொரு தேசியப் பட்டியல் எம்.பி. பதவியை சுழற்சி முறையில் வழங்கும் தீர்மானத்திற்கு அமைவாக தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பல விடயங்களையும் ஆராய்ந்து முதற்கட்டமாக பொறியியலாளர் எம்.எஸ். நளீமை நியமிப்பதற்கு தீர்மானிக்க்கப்பட்டதாக கட்சியின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment