கல்முனை தொகுதியை சிலிண்டர் வெற்றிகொள்ள தேவையான தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டர் சின்னம், மூன்றாம் இலக்க வெற்றி வேட்பாளர் ஏ.எம். ஜெமீல் அவர்களுடைய தேர்தல் செயற்பாட்டு மருதமுனைக்கான காரியாலயம் நேற்று மஃபூலியா பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது.
முஸ்லிம் சமூகத்திற்கும், அம்பாறை மாவட்டத்திற்கும், கல்முனை தொகுதிக்கும் சகோதரர் ஏ.எம். ஜெமீல் மாகாண சபை உறுப்பினராக, அரச வர்த்தக கூட்டுத்தாபன தலைவராக இருந்து செய்த நிறைய சேவைகள் பற்றி நன்றியுடன் நினைவு கூர்ந்த மருதமுனை சகோதரர்கள், தாய்மார்கள், சகோதரிகள் தமது ஆதரவை அணி திரண்டு வெளியிட்டதுடன் புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டர் சின்னம், மூன்றாம் இலக்க வெற்றி வேட்பாளர் ஏ.எம். ஜெமீல் அவர்களுடைய கரத்தினை பலப்படுத்தி ஜெமீல் அவர்களின் வெற்றிக்காக முழுமையாக களத்தில் இறங்கி தேர்தல் பணி செய்ய முன்வந்துள்ளார்கள்.
இந்த தேர்தல் செயற்பாட்டு காரியாலய திறப்பு விழாவில் ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளர் நூருல் ஹுதா, கல்முனை மாநகர சபை உறுப்பினர் சுஹைல் அஸீஸ், சிரேஷ்ட அறிவிப்பாளர் ரோஷன் அஸ்ரப் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment