சம்மாந்துறையில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ரிசாத் புகாரியை ஆதரித்து நடைபெற்ற பிரம்மாண்டமான கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே உலமா கட்சித்தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது,
ரிசாத் புகாரி நிலையான, உறுதியான கொள்கைப்பிடிப்பு கொண்டவர், நேர்மையானவர் என்பதையும் நீண்ட காலமாக நாம் அறிவோம்.
எமது கட்சியும் உங்களைப்போல் உண்மை, நேர்மை கொண்ட கட்சி என்பதால் எமது கட்சியை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என அவர் அடிக்கடி என்னிடம் கூறும். அதற்கான சந்தர்ப்பம் இப்போது வந்துள்ளது.
நமது முஸ்லிம் கட்சிகளின் தூர நோக்கற்ற முடிவால் நமது மக்களை அரசுகளுக்கு எதிரானவர்களாக காட்டிவிட்டனர். இனியாவது நாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட கூடியவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால் சம்மாந்துறை தொகுதியையும், திகாமடுல்ல மாவட்டத்தையும் ஜனாதிபதியின் கட்சியான தேசிய மக்கள் சக்தி வெல்வதற்கு முயற்சிப்போம் என தெரிவித்தார்.
0 comments :
Post a Comment