அம்பாறை மாவட்டத்தில் இன்று காலை முதல் வாக்களிப்பு ஜரூர்.



வி.ரி. சகாதேவராஜா-
லங்கையின் பத்தாவது பாராளுமன்ற தேர்தல் அம்பாறை மாவட்டத்தில் இன்று (14) வியாழக்கிழமை காலை முதல் 528 வாக்களிப்பு நிலையங்களில் ஜரூராக காணப்பட்டது.

குறிப்பாக கரையோர பிரதேசங்களில் இன்று காலையில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க சென்றிருந்தனர்.

காலையில் வானம் மப்பும் மந்தாரமுமாகக் காணப்பட்டது. இருந்த போதிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க சென்றிருந்தனர்.

எனினும் ஏனைய தேர்தல்களைப் போல் வாகன ஓட்டங்கள் படையெடுத்து வாக்களிக்கச் செல்லுதல் என்பது குறைவாகவே காணப்பட்டன.

2024 பாராளுமன்ற தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்தில் 555,432 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அதன்படி அம்பாறை 188222 பேர், சம்மாந்துறை 99727 பேர், கல்முனை 82830 பேர், பொத்துவில் தொகுதியில் 184653 பேர் ஆகும்.இம்மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 04 ஆகும்.

அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் 184 அம்பாறை வாக்களிப்பு நிலையங்கள், 93 சம்மாந்துறை வாக்களிப்பு நிலையங்கள், 74 கல்முனை வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் 177 பொத்துவில் வாக்களிப்பு நிலையங்கள் உட்பட 528 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப் பட்டிருந்தன.

அதேவேளை இன்று மாலை அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப வளாகத்தில் வாக்கு எண்ணும் பணி நடைபெற சகல ஏற்பாடுகளும் நடைபெற்று முடிந்திருக்கின்றன என்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :