மஹிந்த ராஜபக்ஷ தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஒன்பது நாடுகளுடன் இணைந்து தோற்கடித்ததை போன்று தமிழரசுக் கட்சியையும் திட்டம் போட்டு வலுவிழக்க இம்முறையும் சதி நடக்கிறது. ஆனால் இம் முறை அது நடக்காது. முடியவே முடியாது. நாம் நிச்சயமாக வெல்கிறோம். இது சவால்.
இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.
இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர்களான காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் ஆகியோரின் வேண்டுகோளின் ஏற்பாட்டில் காரைதீவு விளையாட்டு கழகம் நடாத்திய கூட்டத்தில் பேசுகையில் தெரிவித்தார்.
காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் தலைவர் வி.விஜயசாந்தன் தலைமையில் நேற்று முன்தினம் (27/10/2024) மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் விளையாட்டுகழக சிரேஷ்ட உறுப்பினர்கள் விளையாட்டுக் கழக வீரர்கள் கட்சித் தொண்டர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் கி.ஜெயசிறில் கருத்து தெரிவிக்கையில்.. கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்படுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளை பிரிவடையச் செய்த அதாவுல்லாவை வெற்றி பெறச் செய்வதற்குமாகவே கருணம்மானை அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட செய்வதற்கு கொண்டு வந்தார்கள்.
காரைதீவு மண்னின் மைந்தர் அமரத்துவமடைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் எமக்கு மீனைக் கொடுக்காமல் தூண்டிலை மாத்திரம் தந்து விட்டு சென்றுள்ளார். அதன் அடிப்படையில் நாங்கள் அபிலாசைகளையும் அபிவிருத்திகளையும் அடைந்து வருகின்றோம். எமக்கு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையை எமது 12 கிராம பிரிவுகளோடு மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி ஆகிய ஊர்களையும் உள்ளடக்கி அமைத்துத் தந்து காரைதீவான் என்று சொல்வதற்கு ஒரு பலத்தை தந்து சென்றுள்ளார்.
அதற்குப் பிறகு வந்த எந்த ஒரு அம்பாறை மாவட்ட தமிழ் அரசியல்வாதிகளுமே உருப்படியாக நிலையான அபிவிருத்தியோ நிலையான தீர்வோ எமக்கு பெற்றுத் தரவில்லை.
பொய் வாக்குறுதிகள் மட்டுமே தந்துள்ளனர். இதன் காரணமாகவே எமது மக்கள் தமிழரசுக் கட்சியில் வெறுப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பானது இணக்க அரசியலை செய்கின்றது. இவர்களுள் சவாரி செய்து கொண்டு சகோதர சமுதாயம்அபிவிருத்தியை பெறுகின்றது. அத்துடன் அரசியல் பயங்கரவாதம் நிர்வாக அடக்குமுறை என்பவற்றை தகர்த்தெறிய வேண்டும். அபிவிருத்திகளை பெற வேண்டும் என்பதற்காக வேண்டி மாத்திரமே எமது அம்பாறை மாவட்ட மக்கள் கருணாமானுக்கு வாக்களித்தார்களே தவிர காசுக்காக வாக்களிக்கவில்லை.
இம்முறை நான் பாராளுமன்றம் சென்று இந்த அரசியல் பயங்கரவாதம் அரசியல் அடக்குமுறைகளை உடைத்தெறிந்து ஊழலற்ற அநுரவின் அரசாங்கத்திற்கு இந்த ஊழலினை எடுத்துக் கூறி உரிமையுடன் கூடிய அபிவிருத்தி பாதையை நிர்வாகத்தினை எடுத்துச் செல்ல இருக்கின்றேன்.
தொடர்ச்சியாக எதிர்ப்பரசியல் செய்து இன்னும் எமது மாவட்டத்தை படுகுழிக்குள் தள்ளாமல் எமது பலத்தை பயன்படுத்தி ஊழலற்ற அரசாங்கத்துடன் இணைந்து நிர்வாக செயற்பாடுகளில் ஈடுபட உள்ளேன் இன்னமும் தொடர்ச்சியாக எதிர்பு அரசியலைச் செய்தால் எமது இளைஞர்கள் வெறுப்படைந்து மீண்டும் எம்மை வெறுக்கின்ற நிலைமைக்கு வருவார்கள் என்றார். அத்துடன் அநுரவின் அரசாங்கம் JVP யின் நாமம் என்று கூற முடியாதுஎன்றார்.
69 லட்சம் வாக்குகளை அளித்து கோட்டா பாயவை வெற்றி பெறச் செய்த மக்களே அவரை விரட்டியடித்தமைக்கு முள்ளிவாய்க்காலில் இறந்த ஆத்மாக்களே காரணமாகும்.
எமது காரைதீவுபிரதேச மக்கள் என்னை தவிசாளராக தெரிவு செய்ததன் பிரதிபலனாக காரைதீவு எல்லைக்குள் அமைந்துள்ள கடற்படையின் பெயர் பலகையில் சாய்ந்தமருது என்று இருந்த பெயரை காரைதீவு என்று மாற்றினேன், அதற்கு அருகில் எல்லையில் உள்ள இடத்தினை மாற்று இனத்தவர்கள் அபகரிக்காமல் இருப்பதற்கு கோயில் அமைத்தேன். எமது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த சடலங்கள் கடலினால் எடுத்துச் செல்லுவதை தடுப்பதற்கு பல கோடி ரூபாய்களை பெற்று கல்வேலி அமைத்தேன். கொரோனா காலங்களில் எமது அரசியல்வாதிகள் குளிரூட்டப்பட்ட அறையிலும் மெத்தைகளிலும் உறங்கும்போது நான் உயிரையும் துச்சம் என நினைத்து அம்பாறை மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டம் மலையக மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினேன். மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு நான் தலைவர் ஆன பிறகு கும்பாபிஷேகம் நடத்தி பத்து ஏக்கர் காணியும் பெற்றுக் கொடுத்திருக்கின்றேன் என பல செயற்பாடுகளை செய்து இருக்கின்றேன்.
எனவே காரைதீவு பிரதேசம் பெற்ற அபிவிருத்தி போன்று அம்பாறை மாவட்டமும் பெற்று வெளிச்சமடைவதற்கு வீட்டு சின்னத்திற்கும் ஐந்தாம் இலக்கத்திற்கும் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள். என்று தெரிவித்தார்..
0 comments :
Post a Comment