கல்முனையில் வளர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் இன்று தோற்கடிக்கப் பட்டிருக்கின்றது. அதே போன்று இந்த கல்முனையில் சிலரை தூண்டிவிட்டு வெடிகளை போட்டு வெடிக்க வைத்த; அரசியல்வாதியை நினைத்தால் மிகவும் கவலையாக இருக்கின்றது. அரசியல் என்றால் ஒரு பக்குவம் இருக்க வேண்டும் நாங்கள் எமது மேடைகளில் எவரையும் தாக்கி பேசியதில்லை நாம் பிறந்த மண்ணை பாதுகாக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் றஹ்மத் மன்சூர் தெரிவித்தார்.
2024 நடைபெற்று முடிந்த 10 ஆவது பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு தோல்வி அடைந்த பின்னர் இன்று (17) விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
ஒவ்வொரு போராட்டமும் தனிநபருக்கானது அல்ல என ஒவ்வொரு மேடைகளிலும் நான் கூறி இருக்கின்றேன். இது கல்முனைக்கான ஒரு போராட்டம். 1994 ஆம் ஆண்டு இது போன்றதொரு போராட்டத்திற்கு முகம் கொடுத்து இருந்த போது கல்முனை பகுதியில் இருந்து முஸ்லிம் வாக்காளர்களின் வாக்குகள் சூறையாடப்பட்டு அம்பாறையில் உள்ள சிங்கள வேட்பாளர்கள் அதிகளவில் தெரிவு செய்யப்பட்டனர். இந்த செயற்பாட்டை பல மேடைகளில் நான் கூறி வந்தது உண்மை இதனை யாவரும் அறிவீர்கள்.
அதேபோன்று தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த புகாரி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு இன்று தேர்தல் முடிவின் பின்னர் நான்கு சிங்கள வேட்பாளர்களை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். இவ்வாறான செயற்பாடு ஒரு அரசியல் வாதி முன்னெடுத்து இருக்கிறார்கள். எதிரி என்றால் நேராக மோத வேண்டும் ஜனநாயக ரீதியெல்லாம் நடக்க வேண்டும் மக்களை சீரழிக்கின்ற ஒரு தீர்மானமாக எடுத்து நீங்கள் செய்த இந்த வேலை அதன் தாக்கம் மக்களுக்கே போய் சேரும். கல்முனை என்பது எல்லோரையும் வாழவைத்த மண் இந்த மண்ணுக்கு துரோகம் செய்தவர்கள் யார் என்பதை மக்கள் தற்போது அறிந்திருக்கிறார்கள்.இதற்குரிய பதிலை மக்கள் கொடுப்பார்கள். கொடுக்க வேண்டும் என்று நான் வினயமாக கேட்டுக்கொள்கிறேன். தற்போது காலகட்டத்தில் பாராளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் மிக அவசியமானது. பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை முன்வைத்த நிலையில் தற்போதைய காலத்தில் பாராளுமன்றத்தில் முஸ்லீம் பிரதிநிதிகள் சராசரியாக 22 பேர் இருக்க வேண்டிய காலமிது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்று மரம் இங்கேதான் முளைத்தது. மர்ஹூம் எம்எச்சம் அஷ்ரப் அவர்களினால் இந்த மரம் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இங்கு வாழ்த்தப்பட்டது ஆனால் இன்று கல்முனையில் தோற்கடிக்கப்பட்டு இருப்பது என்பது மிகவும் கவலையாக இருக்கின்றது.
இவ்வாறு கல்முனையில் வளர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் இந்து தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது. அதேபோன்று இந்த கல்முனையில் சிலரை தூண்டிவிட்டு வெடிகளை போட்டு வெடிக்க வைத்த அரசியல்வாதியை நினைத்தால் மிகவும் கவலையாக இருக்கின்றது. அரசியல் என்றால் ஒரு பக்குவம் இருக்க வேண்டும் நாங்கள் எமது மேடைகளில் எவரையும் தாக்கி பேசியதில்லை நாம் பிறந்த மண்ணை பாதுகாக்க வேண்டும் .அந்த மண்ணுக்கான அபிவிருத்தி திட்டங்கள் எவ்வாறு வழங்கப்பட வேண்டும். பிரதேச வாதத்தை நாங்கள் எவ்வாறு ஒழிக்க வேண்டும். எப்போது நாங்கள் உண்மையாக வாழ வேண்டும். இவ்வாறான குறிக்கோள்களை முன் வைத்து தான் எமது பேச்சுக்கள் அமைந்திருந்தன.
ஆனால் குரோதமான அரசியலில் இருந்து மக்கள் விடுபட வேண்டும். இவ்வாறான தீய அரசியல்வாதிகளை மக்கள் இனங்கான வேண்டும். இது தவிர முஸ்லிம் காங்கிரஸ் என்று பேரியக்கத்தை எவராலும் அழிக்க முடியாது. எமது மக்கள் அதனை மீளவும் எமது மக்கள் உறுதி செய்து இருக்கிறார்கள் .உங்களுக்கு தெரியும் தமிழர் கட்சி கூட அதன் ஆணிவேரை உசுப்பி இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் எமது தலைவர் மதிப்புக்குரிய ரவூப் ஹக்கீம் அவர்கள் எமது சமூகத்தின் குரலாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பது எமக்கு ஆறுதலாக இருக்கின்றது.என்றார்.
மேலும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி சார்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஒரு ஆசணத்தை பெற்றுக்கொள்வதற்காக உழைத்த பத்து வேட்பாளர்களுக்கும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் போராளிகள் ஆதரவாளர்கள் அனைவருக்கும் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர் என்ற ரீதியில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.
திகாமடுல்ல மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தலில் கல்முனை தொகுதியில்தான் பலத்த சவால் நிறைந்த களமாக காணப்பட்டது.
ஏனைய வேட்பாளர்களை விட பலத்த சவால்களையும் கழுத்தறுப்புக்களையும் மற்றைய கட்சிக்காரர்களிடமிருந்து நான் எதிர்நோக்கவில்லை. அவர்கள் ஜனநாயக முறையில் நடந்து கொண்டனர். ஆனால் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் முன்னாள் ஒருவர் மக்களை பிழையாக வழிநடத்தி 1948 ஆம் ஆண்டுமுதல் கல்முனையில் இருந்துவந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்கியுள்ளார்.
தனது இரண்டுகண் போனாலும் பரவாயில்லை தான் விரும்பாதவர்களின் ஒருகண்ணையாவது பறித்துவிடவேண்டும் என கயவர்களை ஏவிவிட்டு கல்முனையின் பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்கினர்.
அவர் செய்ததது வரலாற்றுத் துரோகம். இதற்கான பிரதிபலனை விரைவில் அவர் அடைந்து கொள்வார்.
எனது அயலவர்களை நான் நேசிக்கும் நண்பர்களை எனக்கு வாக்களிப்பதை தடுத்த போதிலும் எனக்கு சிங்கள தமிழ் சகோதரர்கள் உட்பட கணிசமான முஸ்லிம் மக்கள் மாவட்டம் முழுவதிலுமிருந்தும் வாக்களித்துள்ளார்கள் அவர்களுக்கு நான் என்றும் நன்றியுடையவனாக இருப்பேன்.
கல்முனையின் மீது பற்றுள்ள சகோதரர்கள் தன்னுடன் இணைந்து செயற்பட அணிதிரளுமாறு இங்கு வேண்டுகோள் விடுத்தார்.
0 comments :
Post a Comment