க.பொ.த. உயர்தரப்பரீட்சை 25.11.2024 அன்று ஆரம்பமாகியது. நாடு பூராகவுமுள்ள 2312 பரீட்சை நிலையங்களில் 3 இலட்சத்து 33 ஆயிரத்து 185 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
முற்பகல் 8.30 தொடக்கம் பரீட்சைகள் இடம்பெறவுள்ள நிலையில், தேசிய அடையாள அட்டை அல்லது வெளிநாட்டு கடவுச் சீட்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் காலை 8 மணிக்கு முன்னர் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு ஆணையாளர் கோரியுள்ளார்.
காலக் கிரமத்துடன் பரீட்சை அட்டவணைகளை பரீட்சிக்குமாறு ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சை மோசடி தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற துரித இலக்கத்திற்கு அழைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
அந்தவகையில் மலையகத்திலும் மலையக மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை எம்மால் அவதானிக்க முடிந்திருந்தது. அந்தவகையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவா்கள் ஆா்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக இருந்தது. அத்தோடு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

0 comments :
Post a Comment