இடைநிறுத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல், புதிய வேட்பு மனு கோராமல் நடத்தக் கூடாது.-உயர்‌ நீதிமன்றத்தில் மனு



டைநிறுத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல், புதிய வேட்பு மனு கோராமல் நடத்தக் கூடாது என்று தேர்தல் ஆணைக்குழுவை பணிக்குமாறு உயர்‌ நீதிமன்றத்தில் மனு தாக்குதல்.

இந்த மனு புதிதாக வாக்காளராக பதிவு செய்யப்பட்ட இளைஞர்கள் யுவதிகள் கொண்ட ஒரு குழுவினால் உயர்நீதி மன்றத்துக்கு நேற்று முன் தினம் இணைக்கப்பட்டுள்ளது. இம்மனு சட்டத்தரணி எம்.ஐ.எம் ஐனுல்லா அவர்களால் தாக்கல் செய்யப்பட்டு அவருடைய அனுசரணையில் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அவர்களால் வாதாடுவதற்கு உள்ளதாக அறியப்படுகிறது.

இடைநிறுத்தப்பட்ட உள்ளூராட்சி தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று ஏற்கனவே உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு பணித்துரைத்தது.
இதனை அடுத்து தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பாராளுமன்றத் தேர்தல் முடிந்த உடனே வைப்பதற்கான ஆயத்தங்கள் உள்ளதாக அறிய வந்துள்ளதாகவும் அத்தேர்தல் ஏற்கனவே இணைக்கப்பட்ட வேட்பு மனுவின் அடிப்படையில் வைக்கப்படல் தங்களுக்கு அத்தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்படும் என்று இந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏனெனில் தாங்கள் முதன் முறையாக வாக்களிக்கும் உரிமை 23\24 ஆம் வருடங்களுக்கு பெற்றுக் கொண்டதாகவும் ஆகவே ஏற்கனவே பெறப்பட்ட வேட்பு மனுவானது தங்களுக்கு வாக்குரிமை இல்லாத பொழுது பெற்றுக்கொண்ட காரணத்தினால் தங்களுக்கு தேர்தலில் ஈடுபட முடியாமல் போய்விட்டது என்று இவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

இதனால் தங்களுடைய அடிப்படை உரிமைகள் மீறப்படும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டி, இளையவர்களின் ஒரு குழு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. புதிய வேட்பு மனு கோராமல் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்துவது, தங்கள் போட்டியிடும் உரிமையை மீறுவதாகவும், இது அரசியலமைப்பால் பாதுகாக்கப்படும் தங்கள் ஜனநாயக உரிமைகளை பாதிக்கும் எனவும் அவர்கள் வாதிடுகின்றனர்.

ஆகவே பழைய வேட்பு மனு அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டால் தங்களுக்கு அநீதி ஏற்படும் என்றும், இதன் மூலம் அரசியலமைப்பின் 12(1) மற்றும் 14(1) விதிகளில் உள்ள சமத்துவ உரிமை மற்றும் சட்டபூர்வ அரசியல் செயல்பாட்டில் ஈடுபடும் உரிமையை மீறுவதாகவும் அவர்கள் வாதிடுகின்றனர்.
மேலும் இம்மனுவில் ஜனவரி 2023 வேட்பு மனு அடிப்படையில் தேர்தல் வைக்கப்பட்டால் மேலும் பல முக்கியமான பிரச்சினைகள் உருவாகலாம் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதாவது

1. ஜனவரி 2023 வெட்பு மனு பட்டியலில் உள்ள பலர் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு உள்ளனர். நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தல் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட வேண்டும்.

2. 2023 ஆம் ஆண்டு புதிதாக கொண்டுவரப்பட்ட உள்ளூராட்சி தேர்தல் சட்டத்திற்கான திருத்தச் சட்டத்தில் வேட்பாளர்களின் 25% இளையோர் ஆக இருக்க வேண்டும். அந்த நிபந்தனை ஜனவரி 2023 டாக்டர் செய்யப்பட்ட வேட்பு மனுவில் பின்பற்றவில்லை.

3. வேட்பாளர் ராஜினாமா மற்றும் கட்சி உறுப்பினர் மாற்றங்கள் சம்பந்தமாக பல பிரச்சினை ஏற்படலாம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தின் 10A விதிகளுக்கு அமைய அப்படி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை வேட்பு மனு பத்திரத்தில் இருந்து நீக்கி விட்டால் அதற்கான புதிதான வேட்பாளர்களை நியமிப்பதற்கு தற்போதைய சட்டத்தில் விதிமுறைகள் காணப்படவில்லை.

ஆகவே இந்த மனு சம்பந்தமான இறுதித் தீர்ப்பு வரை ஏற்கனவே பெறப்பெற்ற வேட்பு மனு அடிப்படையில் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வைப்பதை இடைநிறுத்துமாறு இடைக்கால உத்தரவும் மனுதாரர்கள் கோரி உள்ளார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :