அரசியலமைப்பு மாற்றத்துக்கும், கல்வி தொழில் புரட்சிக்கும் இந்த வெற்றி வித்திட வேண்டும் : நன்றி நவிதழில் எஸ்.எம். சபீஸ்



நூருல் ஹுதா உமர்-
திர்கட்சியில் இருந்து பலமாக இருந்தவர்களை உடைத்து ஒருவாக்கைப் பெறுவது என்பது கடின உழைப்பின் மூலமே சாத்தியமாகும். அதை நாங்கள் செய்து காட்டியுள்ளோம். எங்கள் கட்சிக்கு ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரசில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்ட எஸ்.எம். சபீஸ் தெரிவித்துள்ளார்.

தனது அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் பணிக்காக பணி செய்தோருக்கும், வாக்களித்த மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

அரசாங்கம் பெற்றுள்ள இமாலய வெற்றிக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வெற்றியின் மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தெரிவுகள் ஒரே தேர்தலில் நடைபெறும் முறையில் அரசியலமைப்பு சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.

கல்வி, தொழில், இடப்பங்கீடு, சம உரிமை, நிர்வாக சமச்சீர் விடயங்களில் புரட்சி ஏற்படுத்த நல்லதொரு சந்தர்ப்பத்தினை மக்கள் வழங்கியுள்ளனர். இதை அரசு சாதித்துக் காட்ட வேண்டும். என்று தனது தேர்தல் பணிக்காக பணி செய்தோருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் எஸ் எம் சபீஸ் தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :